For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தி ரியல் GOAT.. அஸ்வின் செய்த தரமான சம்பவம்.. அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 வீரர்கள் யார்?

ராஜ்கோட் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் டாப் 10 இடங்களில் யார் இடம்பிடித்துள்ளனர் என்பதை பார்க்கலாம்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கிராலி - டக்கெட் கூட்டணி அதிரடியாக ரன்களை குவித்தது. தொடக்க வீரர் டக்கெட் 39 பந்துகளில் அரைசதம் அடிக்க, அஸ்வின் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.

IND vs ENG : Ravichandran Ashwin joins the Elite list of 500 Wickets and Lets see the top 10 Highest Wicket Takers in Test History


அவர் வீசிய 2வது ஓவரிலேயே கிரால் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டின் மூலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். அதுமட்டுமல்லாமல் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் குறைந்த பந்துகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 10 வீரர்கள் வீரர்கள் பட்டியலை பார்க்கலாம். இந்த பட்டியலின் 10வது இடத்தில் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டெயின் 439 விக்கெட்டுகளுடன் உள்ளார். அதேபோல் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகளுடன் 9வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர் நேதன் லயன் 517 விக்கெட்டுகளுடன் 8வது இடத்தில் இருக்கிறார்.

அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வால்ஷ் 517 விக்கெட்டுகளுடன் 7வது இடத்தில், ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கிளென் மெக்ராத் 563 விக்கெட்டுகளுடன் 6வது இடத்திலும் உள்ளார். அண்மையில் ஓய்வை அறிவித்த இங்கிலாந்து ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் 604 விக்கெட்டுகளுடன் 5வது இடத்திலும், இந்திய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் 4வது இடத்திலும், இங்கிலாந்து அணிக்காக ஆடி வரும் ஆண்டர்சன் 696 விக்கெட்டுகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

தொடர்ந்து, மறைந்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளுடன் 2வது இடத்திலும், இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும் உள்ளனர். இந்த டாப் 10 வீரர்கள் பட்டியலில் 5 ஸ்பின்னர்கள், 5 வேகப்பந்துவீச்சாளர்கள் என்று சரிசமமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 16, 2024, 15:59 [IST]
Other articles published on Feb 16, 2024
English summary
IND vs ENG : Ravichandran Ashwin joins the Elite list of 500 Wickets and Lets see the top 10 Highest Wicket Takers in Test History
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+