Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரவீந்திர ஜடேஜா நன்றாக ஆடினாலும் கண்டு கொள்வதே இல்லை வில்லனாக மட்டும் காட்டுகிறார்கள் - அஸ்வின்

கட்டாக்: இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். ஜடேஜா தன்னை விட அதிக திறமையான கிரிக்கெட் வீரர் என்றும், ஊடகங்கள் அவரை போதுமான அளவு பாராட்டவில்லை என்றும் அஸ்வின் கூறியுள்ளார். மேலும், அவர் சரியாக விளையாடாத போது மட்டும் அவரை வில்லனாக காட்டுகிறார்கள் எனவும் கூறி இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு சுருண்டது. ஜடேஜா 9 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

IND vs ENG Ravichandran Ashwin says Ravindra Jadeja is not getting attention

ஜடேஜா இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கிறார். பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் அவர் ஒரு தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார். பல ஆண்டுகளாக, அவர் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக இருந்தார். டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட போதிலும் ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணிகளில் முக்கிய இடத்தை பெற்று இருக்கிறார்.

அஸ்வின் தனது யூடியூப் நிகழ்ச்சியான "ஆஷ் கி பாத்"-ல் ஜடேஜாவின் திறமையை பாராட்டி பேசினார். "ஜடேஜா என்னை விட மிகவும் திறமையானவர். ஒரு வீரர் சிறப்பாக விளையாடும்போது, ​​நமது ஊடகங்கள் அவரைப் பாராட்டுவதில்லை. நாம் தோற்கும் போதெல்லாம், எல்லோரும் வில்லனாகிறார்கள். ஜோ ரூட்டின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். ஜடேஜா எப்போதும் கவனிக்கப்படாமல் போகிறார். அவர் ஒரு 'ஜாக்பாட் ஜாங்கோ'. அவர் ஃபீல்டிங்கில் +10 மதிப்பை வெளிப்படுத்துகிறார. பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படுகிறார். மேலும் அழுத்தமான சூழ்நிலைகளிலும் பேட் செய்கிறார். ஜடேஜாவுக்கு நாம் போதுமான அங்கீகாரம் கொடுப்பதில்லை." என்று அஸ்வின் கூறினார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார். அதன் மூலம் அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங் மற்றும் கபில் தேவ் போன்ற இந்திய ஜாம்பவான்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இந்த சாதனையை எட்டிய நான்காவது இந்திய சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஐந்தாவது இந்திய வீரர் இவர்.

உலக அளவில் ரவீந்திர ஜடேஜா 600 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய 26வது கிரிக்கெட் வீரர் ஆவார். டெஸ்டில் 323 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 220 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 54 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.

Story first published: Saturday, February 8, 2025, 10:57 [IST]
Other articles published on Feb 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+