Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: அப்பா டா! முக்கிய விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா.. ஆனால் இன்னும் சிக்கல் இருக்கு

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராடி வருகிறது. கடைசி இன்னிங்ஸில் 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இங்கிலாந்து அணி எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எதிரணி வீரர்கள் கடுமையாக தடுமாறுகிறார்கள்.

Ben stokes

குறிப்பாக தொடக்க வீரர் பென் டக்கட் இந்திய பந்துவீச்சை சுளுக்கு எடுத்தார். ஏதோ ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் அவர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 170 பந்துகளை எதிர்கொண்ட அவர் 149 ரன்கள் எடுத்தார்.மற்றொரு தொடக்க வீரரன சாக் கிராலி பொறுப்பாக விளையாடிய 65 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி வலுவான நிலையில் இருந்தது.

எனினும் சர்துல் தாக்கூர் வீசிய ஒரே ஓவரில் டக்கட், ஹாரி புரூக் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி நிம்மதி பெருமூச்சு அடைந்தது. இந்த சூழலில் பென் ஸ்டோக்ஸ் களத்திற்கு வந்து அதிரடி காட்டினார். 2019 ஆம் ஆண்டு இதேபோன்று ஒரு சூழலில் பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதே மைதானத்தில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்று வெற்றியை உறுதி செய்தார்.

இதனால் ஸ்டோக்ஸ் இந்தியாவுக்கு எமனாக மாறிடுவாரா என்று ரசிகர்கள் பயந்தனர். இந்த சூழலில் ஜடஜா பந்துவீச்சில் தேவையில்லாத ஒரு ஷார்ட் அடி ஸ்டோக்ஸ் கில்லிடம் கேட்ச் ஆனார். ஸ்டோக்ஸ் 33 ரன்களில் ஆட்டம் இழக்க இங்கிலாந்து அணி 32 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும் இலக்கிற்கான தூரம் மிகவும் குறைந்து விட்டதால் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து அணியின் ஐந்து விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த வேண்டிய நெருக்கடிகள் தற்போது வீரர்கள் உள்ளனர்.

Story first published: Tuesday, June 24, 2025, 22:16 [IST]
Other articles published on Jun 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+