Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: "தலைவணங்குகிறோம்.. ஜாம்பவான் ஜடேஜா".. எந்த இந்திய ஸ்பின்னரும் தொடாத மைல்கல் சாதனை

நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்து வியக்க வைத்துள்ளார். இந்திய அணிக்காக 6641 ரன்களையும், 600 சர்வதேச விக்கெட்களையும் வீழ்த்தி, 6000 ரன்கள் மற்றும் 600 விக்கெட்களை கடந்த முதல் சுழல் பந்துவீச்சாளர் என்ற பிரம்மாண்ட சாதனையை படைத்திருக்கிறார் ஜடேஜா.

இதற்கு முன் கபில் தேவ் மட்டுமே 6000க்கும் அதிகமான ரன்கள் மற்றும் 600க்கும் அதிகமான விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளராக இருந்தார். அவருக்கு அடுத்து இந்த மைல்கல்லை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா செய்துள்ளார். கபில் தேவ் 9031 ரன்களையும், 687 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார்.

IND vs ENG Ravindra Jadeja is the first left hander and spinner to touch 600 wickets and 6000 runs

மேலும், இந்திய அணிக்காக 600 விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்து இருக்கிறார் ஜடேஜா. அதுமட்டுமன்றி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார்.

மேலும், இந்தியாவுக்காக 600 விக்கெட்களை வீழ்த்திய முதல் இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார். இந்த சாதனைகளின் பட்டியல்களை இங்கே பார்க்கலாம்.

இந்திய அணிக்காக அதிக சர்வதேச விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் (இந்த பட்டியலில் ஜடேஜா மட்டுமே ஒரே இடது கை பந்துவீச்சாளர்) -

956 - அனில் கும்ப்ளே
765 - ரவிச்சந்திரன் அஸ்வின்
711 - ஹர்பஜன் சிங்
687 - கபில் தேவ்
610 - ஜாகீர் கான்
600 - ரவீந்திர ஜடேஜா
551 - ஜவகல் ஸ்ரீநாத்
452 - முகமது ஷமி
443 - ஜஸ்பிரித் பும்ரா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் -

42 விக்கெட்கள் - ரவீந்திர ஜடேஜா
40 விக்கெட்கள் - ஜேம்ஸ் ஆண்டர்சன்
37 விக்கெட்கள் - ஆண்ட்ரூ பிளின்டாஃப்
36 விக்கெட்கள் - ஹர்பஜன் சிங்
35 விக்கெட்கள் - ஜவகல் ஸ்ரீநாத் / அஸ்வின்

6000க்கும் அதிகமான ரன்கள் மற்றும் 600க்கும் அதிகமான விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர்கள் -

கபில் தேவ் - 9031 ரன்கள், 687 விக்கெட்கள் (வேகப் பந்துவீச்சாளர்)
ரவீந்திர ஜடேஜா - 6641 ரன்கள், 600 விக்கெட்கள் (சுழல் பந்துவீச்சாளர்)

Story first published: Thursday, February 6, 2025, 18:05 [IST]
Other articles published on Feb 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+