Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியிலிருந்து திடீரென்று விலகிய கோலி.. மனைவி அனுஷ்கா தான் காரணமா? என்ன நடந்தது?

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

இந்தப் போட்டி விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணி வீரர்களுக்கு மிக முக்கிய தொடராக பார்க்கப்பட்டது. ஏனென்றால் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றுக்கு இந்தியாவால் தகுதி பெற முடியும்.

IND vs ENG - Reason for Virat kohli leaving indian team in midway

இந்தப் போட்டிக்காக ஹைதராபாத்துக்கு ஏற்கனவே விராட் கோலி வந்து பயிற்சியில் ஈடுபட்டார். இந்த நிலையில் இன்று ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு கூட விராட் கோலி செல்லவில்லை. இந்த நிலையில் திடீரென்று இந்திய அணியில் இருந்து விராட் கோலி விலகி இருக்கிறார். இதற்கு சில தனிப்பட்ட காரணங்கள் தான் காரணம் என்று கூறிய விராட் கோலி, அதில் தமது முழு கவனமும் இருக்க வேண்டும் என்றும் தமது இருப்பு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனால் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் ஏதேனும் பிரச்சனையா என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் திருமணம் ஆகி இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக தான் விராட் கோலி இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனுஷ்கா சர்மா குழந்தை உண்டாகி இருப்பதால் தான் அவர் எந்த நிகழ்ச்சியிலும் சமீப காலமாக பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் பிரசவம் தான் காரணமா இல்லை விராட் கோலிக்கு வேறு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா என்றும் ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். ஏற்கனவே விராட் கோலிக்கும் அவருடைய மேளாலருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் மேலாளர் சொத்து வாங்குவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? அதனால் தான் கோலி விலகி விட்டாரா என்றும் கூறப்படுகிறது. எனும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ விராட் கோலியின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் குறித்து ரசிகர்களும் ஊடகங்களும் அமைதி காக்க கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 22, 2024, 16:37 [IST]
Other articles published on Jan 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+