விசாகப்பட்டினம் : இந்திய மண்ணில் பவுலிங் செய்யும் பவுலர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய கற்றுக் கொள்வது அத்தியாவசியமானது என்று நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 2ஆம் நாளின் முதல் செஷனிலேயே இந்திய அணி 396 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக இந்திய 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் 171 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.

இந்திய அணியின் ஆதிக்கத்திற்கு பேட்டிங்கில் எப்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டம் முக்கியமானதாக அமைந்ததோ, அதேபோல் பவுலிங்கில் பும்ராவின் 6 விக்கெட்டுகளை காரணமாக அமைந்தது. வெறும் 45 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிட்சில் எந்த உதவியும் கிடைக்காமல் இங்கிலாந்து அணியை சுருட்டியுள்ளார் பும்ரா. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமல்லாமல் 10வது முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதுகுறித்து ஜஸ்பிரித் பும்ரா பேசுகையில், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். இந்திய மைதானங்களில் ரிவர்ஸ் ஸ்விங் முக்கியமான ஆயுதம். இங்கு பிறந்துள்ளதால், நமக்கு எளிதாக கிடைத்த சாதகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நமக்கு நன்றாக தெரியும். அதனால் இந்திய மண்ணில் ரிவர்ஸ் ஸ்விங் வீச கற்றுக் கொள்வது அத்தியாவசியமான ஒன்றாகும். சிறுவயதில் இருந்தே அதிகளவிலான ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை பார்த்திருக்கிறேன்.
அந்த பந்திற்கு ஏற்ப எப்படி ஃபீல்ட் செட் செய்கிறார்கள், பேட்ஸ்மேன்களை எப்படி செட் செய்கிறார்கள் என்பதை ஜாம்பவான் வீரர்கள் பார்த்து கற்றிருக்கிறேன். அதனை நானும் தொடர்ந்து செய்வது மகிழ்ச்சியானது. பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும் போது, ஒவ்வொரு பந்தையும் மேஜிக்கல் பாலாக வீச வேண்டும் என்பதில்லை. அந்த பந்தை வீசுவதற்கான பொறுமையுடன் இருக்க வேண்டும். அதற்கேற்ப பேட்ஸ்மேன்களை சரியாக செட் செய்ய வேண்டும். சாதாரணமாக இன்ஸ்விங், அவுட்ஸ்விங் என்று மாற்றி8 மாற்றி வீசக்கூடாது.
பேட்ஸ்மேன்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை சிண்ட்க்ஹிக்க வேண்டும். போப்பிற்கு வீசிய பந்தை தொடர்ந்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இன்ஸ்விங்கர் பந்துகளை எதிர்பார்த்தார்கள். அதனால் பேட்ஸ்மேன்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதௌஇ மனதில் வைத்து செயல்பட வேண்டும். அதேபோல் சாதனைகளையும், விக்கெட் எண்ணிக்கையையும் முடிந்த அளவிற்கு கவனிக்க தேவையில்லை. அதனை கவனித்தால் நம்மை அறியாமல் அழுத்தத்தை ஏற்படுத்தி கொள்வோம் என்று கூறியுள்ளார்.