Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில் தான் அடுத்த 10 ஆண்டுக்கு கேப்டன்.. பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறங்கனும்- பாண்டிங்

மும்பை: சுப்மன் கில் தனது டெஸ்ட் போட்டி பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் இங்கிலாந்து பயணத்தில் கேப்டன்சி பொறுப்பு கூடுதலாக இருப்பதால், அவர் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்திற்கு மாற வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் வலியுறுத்தியுள்ளார்.

விராட் கோலியின் ஓய்வுக்கு பிறகு இந்தியாவின் புதிய நான்காவது இட பேட்ஸ்மேன் குறித்து பல ஊகங்கள் உள்ள நிலையில், ஜூன் 20 முதல் தொடங்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகளின் தொடரில் கில் இந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று பாண்டிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Ricky Ponting on Gill

"அவரது வைட்-பால் ஆட்டம் மிகச் சிறப்பாக உள்ளது. ஆனால், டெஸ்ட் போட்டி பேட்டிங்கில் அவர் சிறிது முன்னேற்றம் செய்ய வேண்டும். புதிய கேப்டனாக இருக்கும்போது, தனது பேட்டிங்கைப் பற்றி இவ்வளவு கவலைப்படாமல் இருப்பது எளிதல்ல," என்று பாண்டிங், ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு பஞ்சாப் கிங்ஸை வழிநடத்தியபோது தெரிவித்தார்.

தனது டெஸ்ட் வாழ்க்கையை தொடக்க வீரராக ஆரம்பித்த கில், கடந்த ஆண்டு மூன்றாவது இடத்திற்கு மாறினார். கில் கேப்டனாக தேர்வு செய்து இருப்பது சரியான முதலீடு என்று பாண்டிங் கருதுகிறார். இரண்டு முறை ஒருநாள் உலகக் கோப்பை வென்ற கேப்டனான பாண்டிங், கில் இந்தியாவுக்கு நீண்ட காலம் பணியாற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"கடந்த சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் விளையாமல் இருந்தபோது, பும்ராவுக்கு காயம் இருந்ததால், நான் கில்லை கேப்டனாக பரிந்துரைத்தேன். குஜராத் டைட்டன்ஸில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சுப்மனை எனக்கு நன்கு தெரியாது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு, எட்டு, பத்து முறை அவருடன் பேசியிருக்கிறேன்."

"கேப்டன்சி மற்றும் பேட்டிங் குறித்து பேசியபோது, அவருக்கு கூடுதல் பொறுப்பு பயமுறுத்தாது என்று தோன்றியது. அவருக்கு நல்ல புத்திசாலித்தனமான மனநிலை உள்ளது. இந்திய கிரிக்கெட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் இருப்பார்," என்று பாண்டிங் கூறினார்.

32 டெஸ்ட் போட்டிகளில், கில் பலமுறை ஹார்ட் ஹேண்ட்ஸ் ஆடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவரது டிஃபென்ஸ் நுட்பமும் விமர்சிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பாண்டிங், "சில சிறந்த டெஸ்ட் வீரர்களுக்கு சிறப்பான டிஃபென்ஸ் இல்லை. விரேந்தர் சேவாக் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஆனால், உங்கள் ஸ்ட்ரோக்-பிளேயை கட்டுப்படுத்தினால், டிஃபென்ஸ் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை." என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, June 6, 2025, 14:14 [IST]
Other articles published on Jun 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+