Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ரிஷப் பண்ட் உலக சாதனை.. கை நழுவி பறந்த பேட்.. மைதானத்தில் சரியான காமெடி

பிர்மிங்காம் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் 58 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். இதில் எட்டு பவுண்டரிகள், மூன்று சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் இந்தியாவில் வலுவான நிலைக்கு சென்றது.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 407 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனை அடுத்து 180 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடியது.

Rishabh Pant

ஜெய்ஸ்வால் 28 ரன்களின் ஆட்டமிழக்க, கருண் நாயர் 26 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 55 ரன்கள் எடுக்க பண்ட் வழக்கம் போல் தன்னுடைய டி20 கிரிக்கெட்டில் ஸ்டைல் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் கிடு கிடுவென உயர்ந்தது.

இந்த சூழலில் இங்கிலாந்து வீரர் டாங்க் வீசிய ஒரு பந்து அபாரமாக விளையாடி ஒரு சிக்சர் அடித்தார். இதன் மூலம் பண்ட் ஒரு புதிய சாதனையை படைத்தார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமை பண்ட்க்கு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தென் ஆப்பிரிக்காவில் 21 சிக்சர் அடித்திருந்தார்.

தற்போது ரிஷப் பண்ட் இங்கிலாந்து மண்ணில் 23 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்திருந்தார். இதனிடையே ரிஷப் பன்ட், டாங்க் வீசிய ஓவரின் அடிக்கும் போது பேட்டை விளாசினார். அப்போது பேட் அவருடைய கையை விட்டு நழுவி வெகு தூரம் பறந்து விழுந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்ததைப் பார்த்து மைதானத்தில் இருந்த பலரும் சிரித்து விழுந்தனர். டிரஸிங் ரூமில் அமர்ந்து கொண்டிருந்து பார்த்த பும்ரா களகளவென சிரிக்க,பண்ட் பேட்டை எடுக்க ஓடி வந்தார். இதே போன்று பண்ட் 65 ரன்கள் எடுத்திருந்த போது, சோயிப் பஷிர் வீசிய பந்தை மீண்டும் சிக்சருக்கு அடிக்க முயற்சி செய்தார். அப்போது, மீண்டும் பேட் பறந்தது. ஆனால், அவர் அடித்த பந்து கேட்ச் ஆனது.

Story first published: Saturday, July 5, 2025, 20:12 [IST]
Other articles published on Jul 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+