For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்.. மொத்தம் 2 சாதனை முறியடிப்பு

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்து அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணியில் நட்சத்திர வீரர் தோனியின் இரண்டு சாதனையை அவர் முறியடித்து இருக்கின்றார்.

ரிஷப் பண்டை பொறுத்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்து வந்தார்.எனினும் ஆஸ்திரேலியா தொடரில் பண்ட் எதிர்பார்த்தபடி ரன்கள் சேர்க்கவில்லை. சிட்னி டெஸ்ட் போட்டியில் மட்டும் அதிரடியாக அரை சதம் அடித்தார்.

Rishabh Pant

மற்ற இன்னிங்சில் சொதப்பினார். இந்த சூழலில் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும் என கவாஸ்கர் உள்ளிட்டவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கியிருந்தனர்.அதிரடியையும் பொறுமையையும் கலந்து பந்த் தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த கம்பீர் அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் லீட்ஸ் டெஸ்டில் இந்திய அணி 221 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தபோது ஐந்தாவது வீரராக களத்திற்கு ரிஷப் பண்ட் வந்தார்.

ஸ்டோக்ஸ் வீசிய பந்தை இறங்கி வந்து பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.ரிஷப் பந்த் எனினும் தொடர்ந்து அதிரடி காட்டாமல் பொறுமையும் ஆக்ரோஷமும் கலந்த கலவையாக ரன்களை சேர்த்தார். மறுமுனையில் கில் நல்ல கம்பெனி கொடுக்க பண்ட் 91 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் பண்ட், 65 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். இதில் ஆறு பவுண்டரி,இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.இந்த இன்னிங்ஸ் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்,3000 ரன்களை சேர்த்திருக்கிறார். இதன் காரணமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்கள் எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பண்ட் படைத்திருக்கிறார்.

இதன் மூலம் தோனியின் ரெக்கார்டை அவர் முறியடித்திருக்கிறார்.அது மட்டும் இல்லாமல் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையும் பண்ட் முறியடித்திருக்கிறார். தோனி 1731 ரன்கள் அடித்த நிலையில் ரிஷப் பண்ட் தற்போது 1734 ரன்கள் அடித்துள்ளார்.

Story first published: Friday, June 20, 2025, 23:54 [IST]
Other articles published on Jun 20, 2025
English summary
Ind vs Eng- Rishabh Pant breaks MS Dhoni 2 records as Indian Wicket Keeper
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+