Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் செய்த அட்ராசிட்டிஸ்.. சதம் அடித்து பல்டி.. அவுட்டாவதை தடுக்க பேட்டை எறிந்து காமெடி

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷர் பந்த் அபாரமாக விளையாடி சதம் அடித்திருந்தால் இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ஏழாவது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் பண்ட் தடுமாறிய நிலையில் தற்போது முதல் டெஸ்ட் போட்டியிலே இந்திய அணியின் துணை கேப்டனாக சதம் அடித்திருக்கிறார்.

இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் மூன்று சதம் அடித்துள்ள பந்த் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் (SENA) நடைபெற்ற போட்டிகளில் மொத்தமாக பண்ட் 5 சதம் அடித்திருக்கிறார்.

Rishabh Pant

இங்கிலாந்து மண்ணில் மூன்று சதம், இந்திய மண்ணில் இரண்டு சதம், தென் ஆப்பிரிக்காவில் ஒரு சதம், ஆஸ்திரேலியாவில் ஒரு சதம் பண்ட் அடித்திருக்கிறார். இந்த நிலையில் பண்ட் சதம் அடித்தவுடன் தன்னுடைய வழக்கமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பேட்டையும் ஹெல்மெட்டையும் கழற்றி கீழே வைத்த பண்ட் ஸ்பைடர் மேன் போல் ஒரு பல்டி அடித்து தனது சதத்தை கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டத்தை பார்த்தவுடன் ஒட்டுமொத்த இங்கிலாந்து ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். இதேபோன்று பந்த் 124 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு காமெடி நடந்தது.இங்கிலாந்து வீரர் பஷீர் வீசிய பந்தை இறங்கி வந்து இரண்டாவது சிக்சர் அடிக்க முயற்சி செய்தார். ஆனால் பண்ட் பந்தை மிஸ் செய்து விட்டார். இதனால் கையில் இருந்த அவருடைய பேட் பறந்து சென்றது. இதனால் பண்ட் ஸ்டெம்பிட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விக்கெட் கீப்பர் ஜெமி ஸ்மித் பந்தை தவறவிட பண்ட் காப்பாற்றப்பட்டார். அப்போது பண்டின் பேட் பறந்து சென்றது. இதனால் வெறும் காலால் மீண்டும் கிரீசுக்குள் சென்றார். இதேபோன்று வேறு ஒரு சம்பவத்தில் பண்ட் அணிந்திருந்த ஷூ சுழன்றது. இந்த மூன்று சம்பவங்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. ரிஷப் பண்ட் ஆட்டம் இருந்து சென்றவுடன் ஒட்டுமொத்த இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.

Story first published: Saturday, June 21, 2025, 23:17 [IST]
Other articles published on Jun 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+