Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய திரும்பினார்.. எலும்பு முறிவு ஏற்பட்ட பின்பும் முடிவு

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இந்த தருணத்தில் நேரடியாக மைதானத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பண்டிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் இரண்டு மூன்று மாதத்திற்கு கிரிக்கெட் பக்கமே திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் பண்ட் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியானது.

Rishabh Pant

எனினும் மூன்று மாதத்திற்கு கிரிக்கெட் போட்டிகள் விளையாட முடியாததால் இந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மட்டும் செய்ய தான் தயாராக இருப்பதாக பண்ட் பற்றி கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்காக வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு அதற்கான ஊசிகளை எடுத்துக் கொண்டு தாம் பேட்டிங் செய்ய மட்டும் களத்திற்கு வருகிறேன் என்று அவர் கூறியிருக்கின்றார்.

பண்டின் இந்த பேச்சு இந்திய அணி நிர்வாகிகளை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மான்செஸ்டர் டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கிறது. முதல் இன்னிங்சில் குறைந்தபட்சம் 400 ரன்களை தொட்டால் மட்டுமே இந்த டெஸ்ட் இந்திய அணியால் வெற்றி பெற முடியும். அதற்கு ரிஷப் பண்டின் பேட்டிங் மிகவும் முக்கிய காரணம் என்பதால் அவர் பேட்டிங் செய்ய களதிற்கு திரும்பும் முடிவை எடுத்திருக்கின்றார்.

இதற்காக ரிஷப் பண்ட் தற்போது மைதானத்திற்கு வந்து விளையாடுகிறார். ரிஷப் பண்ட் களத்திற்கு வந்த பிறகு ஒட்டுமொத்த வீரர்களும் அவரை வரவேற்றனர். மைதானத்தில் இருந்த பார்வையாளர்களும் எழுந்து நின்று அவருக்கு கைதட்டி உற்சாகம் கொடுத்தனர். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறி இருக்கின்றது.

Story first published: Thursday, July 24, 2025, 17:11 [IST]
Other articles published on Jul 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+