Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் இப்படி பண்ணிட்டீங்களே? ரோகித் மீது கோபமா? முக்கிய கட்டத்தில் அம்போனு விட்டுட்டு போறீங்களே

கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் அரை இறுதி வரை வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக செயல்பட்டது.அதிலும் முக்கியமாக இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நம்பர் மூன்றாவது வீரராக ரிஷப் களமிறங்கினார்.

பண்ட், சில முக்கிய ஆட்டங்களில் தன்னுடைய அதிரடியை காட்டி இருக்கிறார். அயர்லாந்துக்கு எதிராக 36 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 42 ரன்கள், அமெரிக்காவுக்கு எதிராக 18 ரன்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 20 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிராக 36 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 15 ரன்கள் என ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி இருக்கிறார்.

t20 world cup ind vs eng Rishabh pant

இன்னும் ரோகித் சர்மா போல் ரிஷப் பண்ட் இந்த தொடரில் அரை சதம் அடிக்கவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ரிஷப் பண்ட் கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் விராட் கோலி ஒன்பது ரன்களில் ஆட்டம் இழந்ததால், ரிஷப் பண்ட் ரோகித் ஜோடி பேட்டிங்கில் அதிரடி காட்டும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால் ரிஷப் பண்ட், 6 பந்துகளை எதிர் கொண்டு நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி சற்று தடுமாற்றத்தை கண்டது. ரிஷப் பண்ட் மீது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். தோனியை போல் ரிஷப் பண்ட் சுயநலம் இன்றி அதிரடியாக ஆடுவதாக கிரிக்கெட் வல்லுனர்களும் பாராட்டு வருகின்றனர். ஆனால் பண்ட் முக்கிய ஆட்டங்களில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

அரையிறுதியில் பண்ட் காலை வாரிவிட்டு இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது. பண்ட் போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் முக்கிய கட்டத்திலும் அதிரடியாக விளையாடினால் மட்டுமே உலகக்கோப்பை போன்ற தொடரை வெல்ல முடியும். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்டை ரோகித் சர்மா அனைவரின் முன்பும் கடுமையாக திட்டினார்.

இதனால் ரோகித் சர்மா மீது கோபத்தில் ரிஷபன்ட் வேண்டுமென்றே அடித்து ஆட்டம் இழந்து விட்டாரா என்று சில ரசிகர்கள் கொளுத்தி போட்டு இருக்கிறார்கள். ஒருவேளை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றால் ரிஷப் பண்ட் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Story first published: Thursday, June 27, 2024, 22:41 [IST]
Other articles published on Jun 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+