Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் மாபெரும் சாதனை படைக்க வாய்ப்பு.. கில்கிறிஸ்ட், தோனி ரெக்கார்டுக்கு ஆப்பு

மும்பை: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் கில் கேப்டன் ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பண்ட் ஏற்கனவே சிறப்பாக விளையாடி சதங்களை அடித்திருக்கிறார். இதனால் பண்ட் எவ்வாறு விளையாடுகிறாரோ, அதை பொருத்து இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இருக்கும்.இதேபோன்று கில், கே எல் ராகுல் கருண் நாயர் ஆகியோரின் பேட்டிங் நம்பியே இந்திய அணி இருக்கிறது. இந்த சூழலில் பண்ட் ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி இருக்கிறார்.

Rishabh Pant

இங்கிலாந்து மண்ணில் பண்ட் வெறும் 268 ரன்கள் அடித்தால் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் தோனியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.இதுவரை தோனி இங்கிலாந்து மண்ணில் 12 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 778 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் எட்டு அரை சதம் அடங்கும். தோனியின் சராசரி 37 என்ற அளவில் இருக்கிறது. இதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் ராட் மார்ஷ் 21 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 773 ரன்களை அடித்து இருக்கின்றார்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அடம் கில்கிறிஸ்ட் இங்கிலாந்து மண்ணில் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 521 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதில் அவருடைய சராசரி 40 ஆகும். இதில் ஒரு சதம் இரண்டு அரை சதம் அடங்கும். தற்போது வெற்றி டெஸ்ட் போட்டிக்கு விளையாடி 511 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம் அடங்கும். கூடுதலாக ஒரு 11 ரன்கள் அடித்தால் அவர் கிறிஸ்டின் சாதனை முறியடித்துவிடுவார்.அதே போன்று மூன்று ரன்கள் கூடுதலாக அடித்தால் மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹாடின் சாதனையை பண்ட் முறியடிப்பார்.

Story first published: Sunday, June 8, 2025, 14:24 [IST]
Other articles published on Jun 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+