Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: விராட் கோலி ரெக்கார்டை முறியடிக்க ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் 5 சதம் அடித்திருந்தனர்.

இதில் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 134 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்களும் தற்காத்துக் கொள்ள முடியாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தருணத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் புதன்கிழமை தொடங்குகிறது.

Rishabh Pant virat kohli

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ரிஷப் பன்ட் ஐந்து சதம் அடித்திருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் பண்ட், ஒரு சதம் அடித்தால் கூட விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்து விடுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி ஐந்து சதம் அடித்து உள்ள நிலையில் தற்போது இருவரும் சமநிலையில் இருக்கின்றார்கள்.

இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிராக முன்னாள் கேப்டன் அசாருதீன் 6 சதம் அடித்திருக்கின்றார். முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் 7 சதம் அடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக பந்த் சதம் சதமாக இங்கிலாந்துக்கு எதிராக அடித்தால் முதல் இடத்தை பிடிக்க கூட வாய்ப்பு இருக்கின்றது. இதேபோன்று இங்கிலாந்து மண்ணிலும் ரிஷப் பன்ட் அபாரமாக விளையாடி இருக்கின்றார்.

இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் 808 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 42 ஆகும். இதில் நான்கு சதமும், இரண்டு அரை சதமும் அடங்கும். இந்த சூழலில் ரிஷப் பண்ட் சதம் அடித்தால் இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த ஏழாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

இந்த பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் தான் பிராட்மண், பிரைன் லாரா, ராகுல் டிராவிட் உள்ளிட்ட வீரர்கள் இருக்கிறார்கள். கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த மைல் கல்லை ராகுல் டிராவிட் நிலையில் தற்போது ரிஷப் பண்டுக்கும் அந்த வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எப்போதும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரை இழக்கும். இந்த சூழலில் முதல் போட்டியில் தோல்வியை தழுவி இருப்பதால் அதிலிருந்து பாடம் கற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Story first published: Monday, June 30, 2025, 17:54 [IST]
Other articles published on Jun 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+