Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ஒற்றை காலில் அரைசதம் விளாசிய ரிஷப் பண்ட்.. கொடூரமாக நடந்து கொண்ட இங்கிலாந்து

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், மீண்டும் பேட்டிங் செய்து அரை சதம் விளாசினார். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியால் முதலில் இந்தியா பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது.

இந்த சூழலில் பண்ட், நேற்று பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 37 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது ஒரு ஷார்ட் ஆடும் போது பேட்டில் பந்து பட்டு அது அவருடைய காலை தாக்கியது. இதில் ரிஷப் பன்ட் வலியால் துடித்தார். இதை அடுத்து மருத்துவமனைக்கு ரிஷப் பண்ட் கொண்டு சென்ற போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

Rishabh Pant

இதனால் மருத்துவர்கள் அவருக்கு ஆறு வாரம் ஓய்வில் இருக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனினும் பண்ட் வலி நிவாரணம் மருந்துகளை எடுத்துக்கொண்டு தான் பேட்டிங் செய்ய வருவதாக கூறினார். இந்த தருணத்தில் சர்துல் தாக்கூர் ஆட்டம் இழந்தவுடன், பண்ட் களத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், பெரிய அளவு ரன் ஓட முடியாமல் நடந்து சென்று ரன் எடுத்தார்.

மேலும் பந்துகளை அபாரமாக பவுண்டரி சிக்ஸர் என தூக்கி அடித்தார். ஒரு கட்டத்தில் பண்ட், 69 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். தொடர்ந்து ரிஷப் பன்ட் அதிரடியாக விளையாடினாலும், அவரால் ரன் ஓட முடியவில்லை. இந்த கட்டத்தில் ஜோப்ரா வீசிய பந்தை பவுண்டரி அடிக்க பந்த் முற்பட்டார்.

ஆனால் பந்து பவுண்டரி செல்லவில்லை. எனினும் இரண்டு ரன்கள் ஓட முடியாததால் அப்படியே நின்றார். இதன் அடுத்து அடுத்த சில பந்துகளில் பண்ட் போல்ட் ஆகி வெளியேறினார். பண்ட் களத்தை விட்டு வெளியேறும் போது ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். முதல் இன்னிங்ஸ் ஒவ்வொரு ரன்னும் மிகவும் முக்கியம் என்பதால் பண்டின் இந்த ஆட்டம் நிச்சயம் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர். காயம் அடைந்த பிறகு பண்ட் 17 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 24, 2025, 18:54 [IST]
Other articles published on Jul 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+