Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் பண்ணவே இல்லை.. எவ்வளவு பெரிய தப்பான விஷயம் தெரியுமா இது.?. இரண்டாவது டெஸ்ட் பகீர் சர்ச்சை!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடுவர் செய்த தவறு ஒன்று பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் இந்தியா தற்போது மீண்டும் பேட்டிங் செய்து வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 54 ரன்கள் எடுத்துள்ளது. சென்னையில் நடக்கும் இரண்டாவது டெஸ்டில் இந்தியாவின் அதிரடி பவுலிங்கில் இங்கிலாந்து அணி 134 ரன்னுக்கு சுருண்டது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்கள் பின்னடைவை சந்தித்துள்ளது. அஸ்வின் மீண்டும் 5 விக்கெட் எடுத்து அசத்தி இருக்கிறார்.

சென்னை

சென்னை

இந்த நிலையில் விறுவிறுப்பாக நடந்து இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடுவர் செய்த தவறு ஒன்று பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இந்த போட்டியில் தொடக்கத்திலேயே ரஹானேவிற்கு விக்கெட் கொடுக்கவில்லை என்று நடுவர் சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் ஸ்டோனுக்கு தவறாக விக்கெட் கொடுக்கப்பட்டது.

எப்படி

எப்படி

பலமுறை களத்தில் இன்று நடுவர்கள் தவறு செய்தனர். இந்த நிலையில் இன்று இரண்டாவது இன்னிங்சில் ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் போது இதேபோல் சர்ச்சையான சம்பவம் ஒன்று நடைபெற்றது. லீச் பவுலிங்கில் ரோஹித் சர்மா எல்பிடபிள்யூ கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு நடுவர் ரிவ்யூ கொடுக்காத காரணத்தால் டிஆர்எஸ் கேட்கப்பட்டது.

நிலைமை

நிலைமை

இந்த நிலையில் டிஆர்எஸ் ரிவ்யூவில் பந்து ஸ்டம்பை மோதுகிறதா என்று பார்க்காமல் முடிவு கொடுக்கப்பட்டது. லைனில் பந்து குத்தவில்லை.அதேபோல் ரோஹித் சர்மாவின் காலும் லைனுக்கு வெளியே இருந்ததால் விக்கெட் கொடுப்படவில்லை . பொதுவாக பந்தும் வெளியே குத்தி, பேட்ஸ்மேனின் காலும் வெளியே இருந்தால் இப்படி முடிவு அறிவிக்கப்படும்.

மாற்றம்

மாற்றம்

இதற்கு பேட்ஸ்மேன் தனது பேட்டை நகர்த்தி இருக்க வேண்டும். அதாவது பேட்டை அடிப்பது போல நகர்த்தி இருக்க வேண்டும். இது எல்லாம் நடந்து இருந்தால் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக முடிவு கொடுக்கப்படும். ஆனால் டிஆர்எஸ்ஸில் ரோஹித் சர்மா தனது பேட்டை நகர்த்தவே இல்லை. ஆனாலும் அவர் பேட்டை நகரத்தியதாக நடுவர் கூறினார்.

குழப்பம்

குழப்பம்

இதை காரணமாக வைத்து ரோஹித் சர்மா விக்கெட் ஆகவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதை பார்த்து ஜோரூட் கோபம் அடைந்தார். ரோஹித் சர்மா இதில் அவுட். ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை என்று இணையத்தில் பலரும் கொதித்து போய் இருக்கிறார்கள். நடுவர்கள் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக முடிவுகளை அறிவிப்பதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, February 14, 2021, 17:26 [IST]
Other articles published on Feb 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+