Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை போல் ரோகித் சீன் போட மாட்டார்! தனிப்பட்ட சாதனை விட ரோகித்துக்கு அணி தான் முக்கியம்- கபில்தேவ்

மும்பை : இந்திய அணியின் சிறந்த கேப்டனாக ரோகித் சர்மா விளங்குவதாக கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் பாராட்டி இருக்கிறார். தோனிக்குப் பிறகு இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நிலவுகிறது.

ரோகித் சர்மா அணியை பல போட்டிக்கு வெற்றி பாதிக்கு அழைத்துச் சென்றாலும், அவர் ஆக்ரோஷமாக களத்தில் செயல்படுவதில்லை என்று விராட் கோலி ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேசமயம் விராட் கோலி வேண்டுமென்று களத்தில் குதித்து கத்துவதாக ரோகித் சர்மா ரசிகர்கள் விமர்சிக்கின்றார்கள்.

t20 world cup ind vs eng

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், ரோகித் சர்மாவை பாராட்டி பேசி இருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்று இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விராட் கோலியை போல் ரோகித் சர்மா வேண்டும் என்று கத்தி குதிக்க மாட்டார். ரோகித் சர்மாவுக்கு களத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.

கேப்டனாக என்ன செய்ய முடியும் என்பதெல்லாம் தெரியும். அந்த வரையறைக்குள் அவர் சிறப்பாகவே செயல்படுகிறார். ரோகித் சர்மாவை போல் ஒரு சிறந்த வீரரும் இல்லை. பல பெரிய வீரர்கள் அணியை வழிநடத்தி இருக்கிறார்கள். அதில் சிலர் தன்னுடைய தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுகிறார்கள். ஆனால் ரோகித் சர்மா சுயநலம் இன்றி அணியை முன்னிறுத்தி விளையாடுகின்றார்.

அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அணியையும் ரோகித் சர்மா மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டிருக்கிறார். விராட் கோலி 180 கிலோ 250 கிலோ எடையை தூக்குகிறார் என்றால் ரோகித் சர்மாவும் அதே செய்ய வேண்டும் என்பது இல்லை. ரோகித் சர்மாவுக்கு அவருடைய விளையாட்டு என்ன என்று நன்றாகவே தெரியும்

ரோகித் சர்மாவுக்கு சிங்கிள் பேக் தான் இருக்கிறது. அதுவே பெரிய சிக்சர் அடிக்க போதுமானது. இதேபோன்று பும்ரா தற்போது மிகச்சிறந்த பந்துவீச்சாளராக விளங்குகிறார். என்னைவிட ஆயிரம் மடங்கு பும்ரா தான் மிகச் சிறந்தவராக திகழ்கிறார் என்று கபில் தேவ் பாராட்டி இருக்கிறார். கபில் தேவின் இந்த பேச்சை ரோகித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Story first published: Thursday, June 27, 2024, 20:19 [IST]
Other articles published on Jun 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+