இங்கிலாந்தில் சாதிக்குமா 2 தமிழ் சிங்கங்கள்.. கிரிக்கெட் அனுபவம் குறித்து சுதர்சன், வாஷிங்டன் பேச்சு
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக இடம்பெற்ற சாய் சுதர்சன், தனது அணி நண்பர் வாஷிங்டன் சுந்தர் தமக்கு ரோல் மாடலாக இருந்ததாக கூறினார். சாய் சுதர்சன் பேட்டிங் வரிசையில் நம்பர் 3வது வீராக விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த சாய் சுதர்சன், "சுந்தர் எனக்கு ரோல் மாடலாக இருந்தார். அவருக்கு எதிராக சில போட்டிகளில் விளையாடியிருக்கிறேன், அதனால் அது எப்போதும் சிறப்பானது. அவருடன் ஒரு முறை அல்லது இரண்டு முறை பயிற்சி செய்திருக்கிறேன், அவர் மிக விரைவாக முன்னேறி நாட்டுக்காக விளையாடிய விதம் என் மனதில் இருந்தது."

"அவரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஐபிஎல்-லில் சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு, பின்னர் நாட்டுக்காக விளையாடினார். இது எனக்கு பெரிய உந்துதலாக இருந்தது. சென்னையைச் சேர்ந்தவர், சிறு வயதில் இருந்து அவரை அறிந்தவர், அவருடன் விளையாடியவர், இது ஒரு உத்வேகமாக இருந்து, நானும் அதேபோல் செய்ய வேண்டும் என்று உணர வைத்தது." என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய வாசிங்டன் சுந்தர், "சாய் சுதர்சன் குறித்து எனது நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அவரது வளர்ச்சி பற்றி தொடர்ந்து பேசியிருக்கின்றனர். குறிப்பாக கடந்த 3-4 ஆண்டுகளில் அவர் எப்போதும் வளர்ந்து வருகிறார், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகிறார்."
"மேலும் அவர் உலகம் முழுவதும் மேலும் பலருக்கு உத்வேகமளிப்பார் என்று நிச்சயமாக நம்புகிறேன். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி," என்று சுந்தர் கூறினார்.23 வயதான சுதர்சன் இதுவரை இந்தியாவுக்காக மூன்று ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். 25 வயதான சுந்தர், இந்திய அணிக்காக ஒன்பது டெஸ்ட், 23 ஒருநாள், மற்றும் 54 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். வரவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த இருவரும் முக்கிய பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications