மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஒரு புது ரெக்கார்டை அவர் படைத்திருக்கின்றார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 58 ரன்களும், ராகுல் 46 ரன்களும் எடுத்தனர்.

ஒரு கட்டத்தில் கில் 12 ரன்கள் வெளியேற சாய் சுதர்சன் பண்ட் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்த நிலையில் புஜாராவுக்கு பின் இந்தியாவுக்கு ஒரு சரியான வீரர் கிடைக்கவே இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.
கில் மூன்றாவது வீரராக இந்திய மண்ணில் சிறப்பாக செயல்பட்டாலும், அவர் வெளிநாட்டு தொடர்களில் பெரிய அளவு சாதிக்கவில்லை. இந்த தருணத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய ஓய்வு பெற்ற நிலையில் கில் தற்போது நான்காவது வீரராக களமிறங்குகிறார்.இதனால் மூன்றாவது இடத்திற்கு கருண் நாயர் சேர்க்கப்பட்டார். ஆனால் கருண் நாயரும் ஒரு முறை கூட அரை சதம் இந்த தொடரில் அடிக்கவில்லை.
இதனை அடுத்து சாய் சுதர்சனுக்கு மீண்டும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர் 151 பந்துகளை எதிர் கொண்டு 61 ரன்கள் சேர்த்தார். இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும். இங்கிலாந்தின் நெருக்கடியான பந்துவீச்சை அபாரமாக சமாளித்தது மட்டுமல்லாமல் பந்தையும் அவர் பழைய தாக்கினா.
இதன் மூலம் பின் வரிசையில் வரும் வீரர்களுக்கு அது நல்ல உதவியாக இருந்தது. இந்தத் தருணத்தில் இந்தியாவுக்கு வெளியே டிசம்பர் 2023 ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டியில் நம்பர் மூன்றாவது இடத்தில் புஜராவை தவிர வேறு எந்த ஒரு வீரரும் அரை சதம் அடிக்காமல் இருந்தனர். தற்போது சாய் சுதர்சன் தான் மூன்றாவது வீரராக களம் இறங்கி அரைசதம் கடந்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சேனா நாடுகளில் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு புஜாராவை தவிர வேறு யாரும் மூன்றாவது வீரராக களமிறங்கி அரை சதம் அடித்தது கிடையாது. தற்போது சாய் சுதர்சன் தான் அதை செய்திருக்கிறார். இதனால் சாய் சுதர்சன் நம்பர் மூன்றாவது வீரர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.