Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: தமிழக வீரரை நீக்க பிளான் ரெடி? 2வது டெஸ்ட்டில் வாய்ப்பை பறிக்க இப்படி ஒரு கேமா?

லண்டன்: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருக்கும் தமிழக வீரர் சாய் சுதர்சன், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பத்திரிகையாளர் சந்திப்பில், "சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் ரன் குவிக்கவில்லை என்றால், அவர்கள் நீக்கப்படுவார்கள்" எனக் கூறியிருந்தார்.

ஆனாலும், சாய் சுதர்சன் இரண்டாவது போட்டியிலிருந்தே நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏனெனில், அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் அன்று தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அது சிறிய காயம் தான் எனக் கூறப்பட்டாலும், அதை சுட்டிக்காட்டியே அவரை நீக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.

Sai Sudharsan Indian Cricket team IND vs ENG

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சர்வதேச டெஸ்ட் அறிமுகம் பெற்றார். தனது முதல் இன்னிங்ஸில் அவர் 4 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். அடுத்த இன்னிங்ஸில் அவர் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே தான் அவரை நீக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முந்தைய காலங்களில், இந்திய அணியில் சிறிய காயங்களைச் சுட்டிக்காட்டி சரியாக விளையாடாத வீரர்களை அணியிலிருந்து நீக்குவது நடந்துள்ளது. எனவே, இப்போதும் அதுபோல சாய் சுதர்சனை நீக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஒருவேளை சாய் சுதர்சனை நீக்கினால், அந்த இடத்தில் யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அவர் மூன்றாம் வரிசையில் விளையாடுகிறார். இது டாப் ஆர்டர் வரிசையாகக் கருதப்படும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்த இடத்தில் விளையாட முடியாது.

ஒருவேளை சாய் சுதர்சன் நீக்கப்பட்டால், தனது வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் அபிமன்யு ஈஸ்வரன் மூன்றாம் வரிசையில் விளையாடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் ஜுரேல் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தார். அவருக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம். ஆனால், அவர் ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மற்றும் பெரும்பாலும் மிடில் ஆர்டரில் விளையாடுபவர் என்பதால், அவர் இரண்டாம் பட்சமாகவே இருப்பார்.

வரும் நாட்களில் நடைபெற உள்ள வலைப்பயிற்சியில் சாய் சுதர்சன் எப்படி செயல்படுகிறார் என்பதைப் பொறுத்தே அவருக்கான வாய்ப்பு அமையும். ஒருவேளை அவரது தோள்பட்டை காயம் காரணமாக சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை என்றாலும் அது அவருக்கான வாய்ப்பைப் பறிக்கும்.

Story first published: Thursday, June 26, 2025, 13:08 [IST]
Other articles published on Jun 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+