Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிராவிட், கோலி அறிமுகமான அதே நாள்.. 23 வயதில் சாதித்த தமிழக வீரர் சாய் சுதர்சன்.. வரலாறு படைப்பாரா?

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 23 வயது வீரரான தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் அறிமுகம் ஆகி இருக்கின்றார். 23 வயதான சாய் சுதர்சன் இந்திய அணிக்காக ஏற்கனவே மூன்று சர்வதேச ஒரு நாள் மற்றும் ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடிருக்கின்றார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் சாய் சுதர்சன் இரண்டு அரை சதம் அடித்த நிலையில் இதுவரை அவர் டெஸ்ட் போட்டிகள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 29 போட்டிகளில் விளையாடி 1957 ரன்களை அவர் அடித்து இருக்கின்றார்.

Sai Sudharsan

இதில் ஏழு சதம்,ஐந்து அரை சதம் அடங்கும். இந்த சூழலில் சாய் சுதர்சன் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக இருப்பது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் சாய் சுதர்சனுக்கு இருப்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்த கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகிய மூன்று கிரிக்கெட் வீரர்களுமே இதே நாளில் தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாக இருக்கிறார்கள். இந்த மூன்று வீரர்களுமே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

அதே நாளில் தற்போது சாய் சுதர்சன் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி இருப்பதால் அவரும் பெரிய தாக்கத்தை இந்தியா அணிக்கு ஏற்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் 759 ரன்களை அடித்து இருந்தார்.

இன்னும் சாய் சுதர்சனை ஐபிஎல் பார்மை பார்த்து தாங்கள் வாய்ப்பு வழங்கவில்லை என்றும் டெஸ்ட் மற்றும் கவுண்டி கிரிக்கெட்டு களில் அபாரமாக விளையாடியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக அஜித் அகார்கர் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்திய அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு தரப்படவில்லை. விராட் கோலி, டிராவிட், கங்குலி அறிமுகமான அதே நாளில் சாய் சுதர்சன் அறிமுகம் ஆகி இருப்பதால், அவர் பெரிய சாதனையை படைப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, June 20, 2025, 15:40 [IST]
Other articles published on Jun 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+