For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: இன்னும் 92 ரன் எடுத்தால் போதும்.. கம்பீர் ரெக்கார்டை காலி செய்யப் போகும் சாம்சன்

ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் 92 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் அவர் கவுதம் கம்பீரின் டி20 சாதனை ஒன்றை முறியடிப்பார். அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

சஞ்சு சாம்சன் இந்திய டி20 அணியில் துவக்க வீரராக வாய்ப்பு பெற்றதில் இருந்து மூன்று டி20 சதங்களை அடித்து அதிர விட்டு இருக்கிறார். வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக அவர் சதங்களை அடித்து இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் பங்கேற்று ஆடி வருகிறார்.

IND vs ENG Sanju Samson could break Gautam Gambhir record if he scores 92 runs

இந்த தொடரின் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக 26 ரன்கள் எடுத்தார். எனினும், இரண்டாவது போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடி அதிக ரன் சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சஞ்சு சாம்சன் தற்போது டி20 போட்டிகளில் 35 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 841 ரன்கள் சேர்த்து இருக்கிறார் அவர் இன்னும் 92 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் கவுதம் கம்பீரின் டி20 ரன் சாதனையை முறியடிப்பார். சர்வதேச டி20 போட்டிகளில் கவுதம் கம்பீர் 932 ரன்களை சேர்த்து இருக்கிறார். அதை சஞ்சு சாம்சன் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணிக்காக அதிக சர்வதேச டி20 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது சஞ்சு சாம்சன் 13 வது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து டி20 தொடரில் அவர் கவுதம் கம்பீரை முந்தி 12 வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

மற்றொரு வீரரான திலக் வர்மா 21 டி20 இன்னிங்ஸ்களில் மட்டும் பேட்டிங் செய்து 707 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவர் ஒன்பது முறை நாட் அவுட்டாகி இருந்த நிலையில் அவரது பேட்டிங் சராசரி 58.91 என்பதாக உள்ளது. இது நம்ப முடியாத பேட்டிங் சராசரி ஆகும். இந்த தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் திலக் வர்மாவும் கவுதம் கம்பீரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

Story first published: Monday, January 27, 2025, 7:49 [IST]
Other articles published on Jan 27, 2025
English summary
IND vs ENG: Sanju Samson could break Gautam Gambhir record if he score 92 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+