Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: கிங் கோலிக்கே சவால்விட்ட சாம்சன்.. அரையிறுதியில் சேட்டனின் சேட்டை.. முழு விவரம்

மும்பை: டி20 உலக கோப்பை 2026 அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக சஞ்சு சாம்சன், 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து மிரட்டினார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடியதன் மூலம், ஒரு மகத்தான சாதனையை சமன் செய்துள்ளார். டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்களுக்கான விராட் கோலியின் சாதனையைச் சமன் செய்தார்.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு தொடக்க வீரராகக் களமிறங்கிய கேரளாவைச் சேர்ந்த சாம்சன், தனது அதிரடி ஆட்டத்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசினார். 14வது ஓவரின் முதல் பந்தில் வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் பில் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது ஆட்டம் அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது.

விராட் கோலி 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் எடுத்த 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தற்போது சாம்சன் அதனை சமன் செய்துள்ளார். விராட் கோலியும், இதே வான்கடே மைதானத்தில் தான் இந்தச் சாதனையைப் படைத்தார். கோலி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர்களில் கோலி மற்றும் சாம்சன் உள்ளனர். விராட் கோலி 2014ல் இலங்கைக்கு எதிராக 77 ரன்களும், 2024ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 76 ரன்களும் எடுத்தார். 2007ல் கௌதம் கம்பீர் பாகிஸ்தானுக்கு எதிராக 75 ரன்கள் எடுத்து இந்த பட்டியலில் உள்ளார்.

சஞ்சு சாம்சன் மேலும் 11 ரன்கள் எடுத்திருந்தால், டி20 உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் ஆகியிருப்பார். இதற்கு முன்னர், சுரேஷ் ரெய்னா மட்டுமே இந்தியாவின் முதல் டி20 உலகக் கோப்பை சதம் அடித்த வீரராக இருக்கிறார். இந்த வாய்ப்பை சாம்சன் இழந்தது ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தைத் தந்தது.

ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த உலக சாதனை நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் வசமுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில், அன்று கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆலன் வெறும் 33 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அசத்தினார்.

உலக அளவில் டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளின் சிறந்த ஸ்கோர்களில், திலகரத்ன தில்ஷான் 96*, அலெக்ஸ் ஹேல்ஸ் 86*, மார்லன் சாமுவேல்ஸ் 85*. கேன் வில்லியம்சன் 85 போன்ற வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் சஞ்சு சாம்சன் மற்றும் விராட் கோலியின் 89 ரன்கள் சாதனைகள் உலக அரங்கிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

Story first published: Friday, March 6, 2026, 6:30 [IST]
Other articles published on Mar 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+