Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4,4,0,6,4,4 - ஒரே ஓவரில் 22 ரன்கள் விளாசிய சஞ்சு சாம்சன்.. மிரண்டு போன இங்கிலாந்து வீரர்கள்

கொல்கத்தா : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் 22 ரன்கள் விளாசி அசத்தினார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதிலிருந்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.

ind vs eng sanju samson suryakumar

முதல் ஓவரை இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். ஜோப்ரா ஆர்சார் வீசிய பந்தை சஞ்சு சாம்சன் ரன்கள் சேர்க்க தடுமாறினார். எனினும் கடைசி பந்தில் ஒரு சிங்கிள்ஸ் எடுத்து இரண்டாவது ஓவரையும் சஞ்சு சாம்சனையும் பிடிக்க முடிவு செய்தார். என்ன சாம்சன் அமைதி காக்கிறாரே என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

இங்கிலாந்து அணியின் ஆட்கின்சன் வீசிய இரண்டாவது ஓவரை சஞ்சு சாம்சன் சிதறடித்தார். முதல் பந்தை பௌண்டரிக்கு விளாசிய சஞ்சு சாம்சன் இரண்டாவது பந்தையும் பௌண்டரிக்கு விரட்டினார். 3வது பந்து டாட் பால் ஆக மாற நான்காவது பந்தை சாம்சன் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார். இதன் அடுத்து ஐந்தாவது பந்தையும் அடித்த சஞ்சு சாம்சன் அந்த ஓவரின் கடைசி பந்தையும் பவுண்டரி அடித்தார்.

இதன் மூலம் ஒரே ஓவரில் சஞ்சு சாம்சன் 22 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்தப் போட்டிக்கு முன்பு சஞ்சு சாம்சனுக்கும் கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருந்தது. இதனால் சஞ்சு சாம்சன் ஏற்கனவே கடுப்பில் இருந்தார்.

இந்த நிலையில் தற்போது தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பேட்டிங் மூலம் சஞ்சு சாம்சன் தன் மீது விமர்சனம் வைத்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். தொடர்ந்து அதிரடி காட்ட முயன்ற சஞ்சு சாம்சன், ஜோப்ரா ஆர்ச்சர் ஓவரில் 6 அடிக்க முற்பட்டு பவுண்டரில் லைனில் கேட்ச் ஆனார். 20 பந்துகளை எதிர் கொண்ட அவர் 26 நங்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

Story first published: Wednesday, January 22, 2025, 21:29 [IST]
Other articles published on Jan 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+