Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: முதல் பந்திலேயே சிக்சர் அடித்த சஞ்சு சாம்சன்.. 228 ஸ்டிரைக் ரேட் வைத்தும் ஏமாற்றம்

மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வந்த சாம்சன், இந்திய அணியில் ஆஸ்தான தொடக்க வீரர் என்ற இடத்தை பிடித்தார்.

எனினும் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஸ்கோர் அடிக்க முடியாமல் தடுமாறினார். இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரில் சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் 26 ரன்களும், இரண்டாவது போட்டியில் 5 ரன்களும், மூன்றாவது போட்டியில் மூன்று ரன்களும், நான்காவது போட்டியில் 1 ரன்னும் எடுத்திருந்தார்.

ind vs eng suryakumar sanju samson

இந்த நிலையில் சஞ்சு சாம்சன், ஐந்தாவது டி20 போட்டியில் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். களத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய இலக்கை தொட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார்.

இதே போன்று முதல் முதலில் ஐந்தாவது பந்திலும் சிக்சர் அடித்தார். சஞ்சு சாம்சன் ஆறாவது பந்திலும் பவுண்டரி அடித்தார். முதல் ஓவரில் சஞ்சு சாம்சன் 16 ரன்கள் எடுத்தார். இதனால் சஞ்சு சாம்சன் இன்று பட்டைய கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக ஆட்டத்தில் இரண்டாவது ஓவரில் மார்க் வுட் வீசிய ஷார்ட் பந்தை சாம்சன் அடிக்க முற்பட்டபோது மீண்டும் பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார்.

இதனால் சஞ்சு சாம்சன் தொடர்ந்து ஷார்ட் பாலை எதிர்கொண்ட ஆட்டம் அடைந்து வருகிறார். இன்னும் இன்றைய ஆட்டத்தில் சாம்சன் நல்ல தொடக்கத்தை கொடுத்ததால் அவர் அணியை விட்டு தூக்கப்பட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய டி20 அணியில் வாய்ப்புக்காக ஜெய்ஸ்வால் கில் ருதுராஜ் போன்ற வீரர்கள் காத்திருப்பதால் தொடக்க இடத்திற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, February 2, 2025, 20:50 [IST]
Other articles published on Feb 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+