Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG- தோனியின் மகத்தான ரெக்கார்டை முறியடிக்க சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல்,சஞ்சு சாம்சன் அபிஷேக் சர்மா,திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை பைனலில் விளையாடிய பிறகு ஒன்றரை ஆண்டுகள் கழித்து முகமது சமி இந்திய அணிக்கு இன்றைய ஆட்டத்தில் மூலம் திருப்புகிறார். பும்ரா இந்த தொடரில் ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஷமி, ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் இந்த தொடரில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர்.

இந்த நிலையில் டி20 போட்டிகளில் கடந்த சில மாதங்களாக அபாரமாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். வங்கதேசத்துக்கு எதிராக சதம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு சதம் என சஞ்சு சாம்சன் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

அண்மையில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் சஞ்சு சாம்சன் 216 ரன்கள் அடித்து இருந்தார். 194 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரேட் இருந்தது. தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. இதற்கு கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உடன் சஞ்சு சாம்சன் ஏற்பட்ட போதலை காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் ஒரு நாள் அணியில் சேர்க்கப்படாததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சஞ்சு சாம்சன் இன்றைய ஆட்டத்தில் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சாம்சன், இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மாபெரும் சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதாவது இந்த தொடரில் சாம்சன் 7 சிக்சர் அடித்தால் சர்வதேச டி20 கிரிக்கெட் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தோனியின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடிப்பார். தோனி இதுவரை 52 சிக்ஸர்களை சர்வதேச டி20 20 கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார். ஆனால் சஞ்சு சங்சன் 33 இன்னிங்ஸ்களில் விளையாடி 46 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். ஆனால் அவர் இன்னும் ஆறு சிக்சரை அடித்தால் தோனியின் சாதனை சமன் செய்வார். 7 சிக்சர் அடித்தார் தோனியின் ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Wednesday, January 22, 2025, 8:25 [IST]
Other articles published on Jan 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+