Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சன்-க்கு ஏற்பட்ட காயம்.. ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்.. ராஜஸ்தான் அணிக்கு வந்த இடி

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் முதல் பந்திலே சிக்சர் பறக்கவிட்டு முதல் ஓவரில் 16 ரன்கள் குவித்தார். ஆனால் பேட்டிங் செய்யும்போது சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை. சஞ்சு சாம்சனுக்கு பதில் துருவ் ஜுரல் தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

இந்த நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் குறித்து ஒரு முக்கிய அப்டேட் கிடைத்திருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது அஜித் அகார்கரை நினைத்தாலும் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு வந்து களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ind vs eng sanju samson ipl 2025 rajasthan royals

சாம்சனுக்கு ஏற்பட்டிருக்கும் கைவிரல் காயம் நினைத்ததை விட தீவிரமாக இருப்பதாகவும், அது குணமாக குறைந்த பட்சம் ஒன்றரை மாதங்கள் ஆகலாம் என்று தெரிகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் நேற்று இரவு திருவனந்தபுரம் புறப்பட்டு சென்று விட்டதாகவும், விரைவில் அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து பயிற்சி செய்வார் தெரிகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் 21ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக சாம்சன், ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சாம்சன் தான் செயல்படுகிறார். இதனால் அவர் இல்லை என்றால் அது ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

எனினும் ஆறு வாரம் என்பதால் அவர் ஐபிஎல் தொடருக்கு முன்பே தயாராகி விடுவார் என ராஜஸ்தான் அணி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் ரஞ்சி கோப்பையின் கால் இறுதி ஆட்டம் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் கேரள அணி புனேவை எதிர்கொள்கிறது. தற்போது சந்தோஷ் அம்சனுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் இந்த போட்டியில் கண்டிப்பாக பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

ஏற்கனவே கேரள அணி நிர்வாகிகளுக்கும் சஞ்சு சாம்சனுக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த காயத்தை காரணம் காட்டி சாம்சம் அந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் அடுத்த சீசனில் சாம்சன் தமிழ்நாடு அல்லது ராஜஸ்தான் போன்ற அணிகளுக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட கூடும் என்றும் தெரிகிறது.

Story first published: Monday, February 3, 2025, 18:50 [IST]
Other articles published on Feb 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+