Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: அரையிறுதியில் சாம்சன், இசான் கிஷன் சாதனை.. ஆட்டத்தையே மாற்றிய 45 பந்துகள்

மும்பை: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 அரையிறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் இணை புதிய சாதனை படைத்துள்ளனர். மும்பை வான்கடே மைதானத்தில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நாக் அவுட் ஆட்டத்தில் ரன்கள் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்தவீச்சை தேர்வு செய்தார். ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால், 200 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டிய நெருக்கடியில் களமிறங்கினர். அதிரைடி வீரர் அபிஷேக் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க, 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இசான் கிஷன், சாம்சன் ஜோடி அதிரடி காட்டி ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி, யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா சேர்த்த 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்து, 97 ரன்களைக் குவித்தது. இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்தியாவிற்கான டி20 உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் இதுவே மிக அதிக பார்ட்னர்ஷிப்பாகும்.

வெறும் 27 பந்துகளில் 50 ரன்கள் எட்டிய இந்த இணை, மொத்தமாக 45 பந்துகளில் 97 ரன்களைப் பதிவு செய்தது. இதற்கு முன், 2007 உலக டி20 அரையிறுதியில் டர்பனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜ்-உத்தப்பா 6.3 ஓவரில் எடுத்த 84 ரன்களே இந்திய அணியின் சாதனையாக இருந்தது.

சாம்சனின் பேட்டிங் ஆக்ரோஷமாக இருந்தது. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் மிட்-ஆனில் ஒரு எளிதான கேட்ச்சை தவறவிட்டதால் அவருக்கு வாழ்வு கிடைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆர்ச்சரை குறிவைத்து இரண்டு சிக்ஸர்களையும் பல பவுண்டரிகளையும் விளாசினார். 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்த சஞ்சு, வில் ஜாக்ஸ் வீசிய பந்தில் ஃபில் சால்ட்டிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால் 11 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பு பறிப்போனது.

Story first published: Thursday, March 5, 2026, 20:21 [IST]
Other articles published on Mar 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+