Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அன்புள்ள அப்பாவுக்கு.. சர்பராஸ் கானின் ஜெர்சியில் உள்ள ரகசியம்.. ”97” எண்ணை தேர்வு செய்ததன் பின்னணி!

ராஜ்கோட் : இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமாகியுள்ள இளம் வீரர் சர்பராஸ் கானின் ஜெர்சி நம்பர் 97 பற்றிய ரகசியம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களில் எந்தவொரு கிரிக்கெட் வீரரின் அறிமுகமும் இந்தளவிற்கு நெகிழ்ச்சியை கொடுத்திருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது சர்பராஸ் கானின் அறிமுகம். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார் சர்பராஸ் கான்.

IND vs ENG : Sarfaraz Khan Jersey number 97 is a tribute to his father Naushad Khan

உள்ளூர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள சர்பராஸ் கான் நீண்ட நாட்களாக தேர்வு செய்யப்படாமல் பிசிசிஐ-யால் புறக்கணிக்கப்பட்டு வந்தார். இந்த சூழலில் ஒரே நேரத்தில் சீனியர் வீரர்கள் பலரும் வெளியேற, வாய்ப்பு சர்பராஸ் கானை தேடி வந்துள்ளது. இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமாகும் 311வது வீரர் என்ற பெருமை சர்பராஸ் கானுக்கு கிடைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளே அவருக்கு உற்சாகமளிக்கும் வார்த்தைகளையும், கடந்து வந்த பாதைகளையும் கூறி டெஸ்ட் கேப்பை சர்பராஸ் கானுக்கு வழங்கினார். அதனை அருகில் இருந்து பார்த்து வந்த சர்பராஸ் கானின் தந்தை நெளஷாத் கான் மகிழ்ச்சியில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதது ரசிகர்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து சர்பராஸ் கான் அருகில் சென்று இந்திய டெஸ்ட் அணி கேப்பை நெளஷாத் கானிடம் காட்டிய போது, அந்த கேப்பிற்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ ட்ரெண்டான நிலையில், சர்பராஸ் கானின் ஜெர்சி நம்பர் பற்றிய ரகசியமும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்பராஸ் கான் தனது ஜெர்சி நம்பராக 97 என்ற எண்ணை தேர்வு செய்துள்ளார்.

97 என்ற எண்ணை தேர்வு செய்ததற்கு அவரது தந்தையே காரணம் என்று தெரிய வந்துள்ளது. சிறு வயதில் இருந்தே சர்பராஸ் கானின் பயிற்சியாளராகவும் இருந்து வந்தவர் நெளஷாத் கான் தான். இதனால் தந்தை மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் நெளஷாத் என்ற பெயரை பிரித்தால் நெள-ஷாத் என்று கூறலாம். இந்தியில் நெள என்றால் 9, ஷாத் என்றால் 7 ஆகும். இதனால் தந்தை பெயரை எண்ணில் குறிப்பிடும் வகையில் 97 என்ற எண்ணையே ஜெர்சியில் பதித்துள்ளார் சர்பராஸ் கான். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, February 15, 2024, 13:18 [IST]
Other articles published on Feb 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+