Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 3வது டி20 இந்திய அணிக்குள் வரும் சிவம் துபே.. யாருடைய இடத்திற்கு தெரியுமா?

ராஜ்கோட் : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ராஜ்காட் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றி விடும். இந்த நிலையில் இந்திய அணியில் இரண்டு முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் அவர்கள் மூன்றாவது t20 போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.

ind vs eng shivam dube suryakumar

ரிங்கு சிங் மூன்றாவது மற்றும் நான்காவது டி20 போட்டிகளிலும், நிதிஷ்குமார் இந்த தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என ஏற்கனவே கேப்டன் சூரிய குமார் அறிவித்துள்ளார். அவர்களுக்கு பதிலாக சிவம் துபே மற்றும் ரமந்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் சிவம் துபே இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்தார்.

இந்த சூழலில் அவருக்கு இந்த தொடரில் முதல் அணியில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் தற்போது மாற்று வீரராக தான் வந்திருக்கிறார். இந்த தருணத்தில் சிவம் துபே மூன்றாவது டி20 போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது. அவர் யாருக்கு பதிலாக விளையாட போகிறார் என்பது தான் தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. அதன்படி இரண்டாவது டி20 போட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜூரில் பெரிய அளவு சாதிக்கவில்லை. அவர் கூடுதல் விக்கெட் கீப்பராக தான் இந்திய அணியில் இருக்கிறார்.

விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வரும் நிலையில் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதில் சிவம் துபே சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி இந்திய அணியில் இருந்தும் அவர் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. அந்த சூழலில் மூன்றாவது டி20 போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என தெரிகிறது. சிவம் துபே, தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 27, 2025, 15:12 [IST]
Other articles published on Jan 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+