Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் எல்லாம் பேட்டிங் வரும் முன்பே அவுட் ஆகிவிடுவார்.. இது எல்லாம் ஒரு நடுவரிசையா? ஸ்ரீகாந்த் சாடல்

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்திய அணி இந்த போட்டியில் 233 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பாக பேட்டிங் நம்பர் எட்டாவது இடத்தில் விளையாடிய ஆல்ரவுண்டர் சிவம் துபே கோல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

33 வயதான சிவம் துபே, இதற்கு முன்பு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சராசரியாக 21 ரன்கள் அடித்திருந்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 131 என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில் சிவம் துபே ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய அணி கேப்டன் ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியிருக்கிறார்.

Ind vs Eng

சிவம் துபே களத்திற்கு வருவதற்கு முன்பே அவுட் ஆகிவிடுகிறார். களத்திற்கு பேட்டிங் செய்ய வருகிறார். எதிரணி வீசும் ஷார்ட் பால்களை பார்த்து பயந்து விடுகிறார். அவர் எப்போதுமே ஷார்ட் பாலை பற்றி யோசித்துக் கொண்டே இருக்கின்றார். இதனால் அவர் எதிர்கொள்ளும் பந்தில் அவுட் ஆகி விடுகிறார்.

ரோகித் சர்மா தலை மீது கத்தியை தொங்கவிட்டால், அவரால் எப்படி ரன் குவிக்க முடியும்? சடகோபன் ரமேஷ் தாக்கு

ரோகித் சர்மா தலை மீது கத்தியை தொங்கவிட்டால், அவரால் எப்படி ரன் குவிக்க முடியும்? சடகோபன் ரமேஷ் தாக்கு

இதுபோன்று வாஷிங்டன் சுந்தர் அக்சர் பட்டேல் ஆகியோரும் இருக்கிறார்கள். துபே கூடுதல் பேட்டராக அணியில் இருக்கிறார். இசான் கிஷனும் இந்த தொடரில் ஷார்ட் பாலில் ஆட்டமிழந்து இருக்கின்றார். அதுவும் ஷாம் கரன் போன்ற பவுலரிடம் அவுட் ஆகி இருக்கிறார். இந்த இந்திய அணியை பாருங்கள். இதெல்லாம் ஒரு நடுவரிசையா? இந்திய அணி நிர்வாகம் என்ன யோசிக்கிறது என்றே தெரியவில்லை.

வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் ஷாட் பந்துகளை எதிர் கொண்டு அவுட் ஆகி விடுகிறார்கள். அவ்வளவு அபாயகரமான பவுலிங் கொண்ட அணியாகவும் இங்கிலாந்து இல்லை. ஷாம்கரன் மற்றும் வில்ஜாக்ஸ்க்கு எதிராக ரன் சேர்க்க முடியாமல் இந்திய அணி பேட்டர்கள் அவுட் ஆகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தவறான ஷாட்கள் ஆடி ஆட்டம் இழப்பது தான்.

IND vs ENG: இந்த 3 வீரர்களை உடனடியாக ஒருநாள் அணியில் தேர்வு செய்யுங்க.. அப்புறம் நடக்கறதே வேற

IND vs ENG: இந்த 3 வீரர்களை உடனடியாக ஒருநாள் அணியில் தேர்வு செய்யுங்க.. அப்புறம் நடக்கறதே வேற

அது மட்டுமல்லாமல் இந்திய அணியின் பேட்டர்களில் மனநிலையும் ஆக்ரோஷமாக இல்லை. இங்கிலாந்து போன்ற ஒரு மோசமான அணிக்கு எதிராக நாம் தோற்கிறோம் என்றால் நாம் எவ்வளவு மோசமாக இருக்கிறோம் என்று பார்த்துக் கொள்ளுங்கள். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மட்டும்தான் ஓன் மேன் ஆர்மி போல் செயல்படுகிறார். வில் ஜாக்ஸ்க்கு எதிராக அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் தான் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது என்று ஸ்ரீகாந்த் சாடி உள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறுகிறது.

Story first published: Friday, July 17, 2026, 19:02 [IST]
Other articles published on Jul 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+