Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: தோல்விக்கு ரிஷப் பண்ட் மீது பழியை போட்டு எஸ்கேப் ஆன இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த நிலையில் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணி கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழந்தது தான் போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது பழியை போட்டு எஸ்கேப் ஆனார்.

Shubman Gill

இந்த போட்டி குறித்து பேசிய அவர், "இந்திய அணியில் மிகவும் மதிப்பு மிக்க வீரர் என்றால் அது ஜடேஜா தான். அவரைப் போல் இன்னொரு வீரரை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். கீழ் வரிசை வீரர்களுடன் பேட்டிங் செய்து ரன்களை சேர்ப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் பலமுறை பேசி இருக்கின்றோம். ஜடேஜா இந்திய அணியின் போராட்ட குணத்தை காட்டி கடைசி வரை போராடியது பாராட்டத்தக்கது."

"193 ரன்கள் என்பது நிச்சயம் எட்டக்கூடிய இலக்கு தான். ஒரு இரு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். கடைசி வரை கூட நாங்கள் ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பில் தான் இருந்தோம். ஜடேஜாவின் இந்த பங்களிப்பு நிச்சயம் பெருமை தரக்கூடிய விஷயமாகும். நான்காவது நாள் ஆட்ட நேர கடைசியிலும் ஐந்தாவது நாள் ஆட்ட நேரத்தில் தொடக்க வீரர் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை."

"முன்வரிசை வீரர்கள் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் கூட வெற்றி பெற்றிருக்கலாம் துரதிஷ்டவசமாக எங்கள் டாப் வரிசை வீரர்களால் அதை செய்ய முடியவில்லை. இந்த தொடரில் இப்படி நடந்தது. இதுதான் முதல் முறை இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து 11 ஓவர் வீசி இருந்தார். அவருடைய செயல்பாடை பார்க்கும்போது நிச்சயம் பாராட்ட வேண்டியது தான்."

"ரிஷப் பண்ட், ஸ்கேன் பரிசோதனை செய்தார். அவர் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகி விடுவார் என்ற நம்புகிறேன். முதல் இன்னிங்ஸில் அவர் ரன் அவுட் ஆனது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனைக்கு ஏற்படுத்தி விட்டது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்வது கடினம் என்று எங்களுக்கு தெரியும். இதனால் முதலில் நின்று நாங்கள் பெரிய ஸ்கோரை எட்டிருக்க வேண்டும்."

"அந்த ரன் அவுட் விஷயத்தில் கூட ராகுல் சதம் அடிப்பதற்காக ஓடவில்லை. இது வீரர்களும் கணிக்க தவறி இருக்கிறார்கள். சொல்லப் போனால் பண்ட் தான் அந்த ரன் ஓட முடிவு செய்தார். போட்டியின் போது நான் சில வார்த்தைகள் பேசியது மாற்றத்தில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக தான். எங்கள் இரு அணி வீரர்களுக்கும் இடையே நல்ல மரியாதை இருக்கின்றது. ஆட்டத்தில் சில நேரத்தில் இது போல் ஆகலாம்" என்று கில் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, July 15, 2025, 7:00 [IST]
Other articles published on Jul 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+