பிர்மிங்காம்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காம் நகரில் வரும் புதன்கிழமை முதல் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் பிர்மிங்காமில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனான சுப்மன் கில், ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். கில்லின் சொந்த ஊர் பஞ்சாப் மாநிலம் ஆகும். இந்த சூழலில் சுமங்கில் பஞ்சாப் மாநிலத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடிய இரண்டு வீரர்களை தேர்வு செய்து அவர்களை இங்கிலாந்துக்கு பயிற்சிக்கு அழைத்திருக்கின்றார்.

அதில் ஒருவர் இடது கை சுழற் பந்துவீச்சாளரான ஹர்பிரித் பிரார் ஆவார். தனது மனைவியுடன் இங்கிலாந்தில் உள்ள நிலையில் கில் அவரை பயிற்சிக்கு அழைத்திருக்கிறார். இதைப் போன்று சண்டிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜெக்ஜித் சிங் சாந்து என்ற ஒரு வேகப்பந்துவீச்சாளரையும் கில் இங்கிலாந்துக்கு அழைத்து வந்துள்ளார்.
அணியில் இருந்த கூடுதல் வீரர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட நிலையில் கில் இரண்டு வீரர்களை வர வைத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. எனினும் இந்த இரண்டு வீரர்கள் பயிற்சிக்காக மட்டும்தான் அழைத்து வரப்பட்டு இருப்பதாகவும், இந்திய மெயின் அணியில் இவர்கள் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
பயிற்சியில் அதிக பந்துகளை எதிர்கொள்வதற்காக கூடுதல் வீரர்களை கில், தன்னுடைய பவரை பயன்படுத்தி பிசிசிஐயிடம் சொல்லி இங்கிலாந்துக்கு இந்த இரண்டு வீரர்களையும் அழைத்து வந்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பிரீத் பிரார், "என்னுடைய மனைவி சுவிண்டன் என்ற நகரில் இருக்கின்றார்.
பிர்மிங்காமில் இருந்து ஒரு மணி நேரம் தூரம் பயணம் செய்தால் அந்த ஊருக்கு சென்று விடலாம். இந்த சூழலில் கில் என்னிடம் போனில் பேசிக் கொண்டிருந்தபோது, இந்திய அணியின் பயிற்சியில் வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். இதனால் தான் வந்தேன் என்றும் அவர் கூறினார்.