Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 93 ஆண்டுகளில் முதல் முறை.. முச்சதத்தை தவறவிட்ட கில்.. சச்சின், கோலி சாதனை முறியடிப்பு

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முச்சதம் அடிக்க வாய்ப்பு இருந்த நிலையில், 31 ரன்களில் அதனை தவற விட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா அணி தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காம் நகரில் புதன்கிழமை தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஆட்டம் இழக்க, கருண் நாயர் 31 ரன்களில் வெளியேறினார். பண்ட் 25 ரன்களிலும், நிதிஷ்குமார் ரெட்டி ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தார்.

Shubman Gill

இந்த சூழலில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இந்திய அணி தடுமாறியபோது கில், ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 200 ரன்களை கடந்தது. ஒருமுனையில் 199 பந்துகளில் சதத்தை அடித்த கில், தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவருடைய விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் தடுமாறினர். இதனால் கில் தன்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை 311 பந்துகளில் பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 348 பந்துகளில் 250 ரன்கள் சேர்த்தார். இதனால் கில் முச்சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 269 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோஷ் டங் பந்துவீச்சில் கில் ஆட்டம் இழந்தார். கில்லின் இன்னிங்சில் 30 பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.

கில் ஆட்டம் இழந்தவுடன் ஒட்டுமொட்ட கிரிக்கெட் ரசிகர்களும் மைதானத்தில் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர். இங்கிலாந்து வீரர்களும் அவரை கை குலுக்கி வழி அனுப்பி வைத்தார்கள். இந்த சூழலில் கில் ஒரு மகத்தான சாதனையை செய்திருக்கிறார். 93 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை கில் படைத்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் 93 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் நம்பர் நான்காவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை கில் படைத்திருக்கின்றார். சச்சின் டெண்டுல்கர், டக்காவில் வங்கதேசத்துக்கு எதிராக 248 ரன்களும், விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பூனேவில் 254 ரன்கள் எடுத்திருந்தனர். தற்போது கில் இவ்விரண்டு வீரர்களையும் பின்னுக்கு தள்ளி 269 ரன்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்திருக்கின்றார்.

Story first published: Thursday, July 3, 2025, 21:00 [IST]
Other articles published on Jul 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+