For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே போட்டி.. உடையப் போகும் 13 சாதனைகள்.. சுப்மன் கில்லுக்கு கிடைத்த அற்புதமான சான்ஸ்!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு 13 சாதனைகளை படைக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஒரு ரன் அடித்தால் கூட ஒரு பெரிய சாதனையை சுப்மன் கில்லால் படைக்க முடியும். அந்த சாதனைகளின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால், 2-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும். இந்த நிலையில் 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் 13 சாதனைகளை முறியடிக்கும் வாய்ந்துள்ளது.

IND vs ENG Shubman Gill can break 13 Records with his bat by playing against England in the 5th Test at Oval Stadium

இதனால் இந்திய அணி ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதாவது 5வது டெஸ்ட் போட்டியில் ஒரேயொரு ரன்னை எடுத்தாலே, SENA நாடுகளில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வெளிநாட்டு கேப்டன் என்ற சாதனையை சுப்மன் கில் படைக்க முடியும். இதற்கு முன்பாக 1966ஆம் ஆண்டு இங்கிலாந்து வந்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கேரி சோபர்ஸ் 722 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்து வருகிறது.

அதேபோல் 11 ரன்கள் சேர்த்தால் இந்திய கேப்டனாக ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை சுப்மன் கில்லால் படைக்க முடியும். இதற்கு முன்பாக 1978ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்து வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனை கிரஹாம் கூச் வசம் உள்ளது. 3 போட்டிகளில் விளையாடி 752 ரன்களை விளாசி இருக்கிறார். இவரின் சாதனையை முறியடிக்க சுப்மன் கில்லுக்கு 31 ரன்கள் தேவையாக உள்ளது. அதேபோல் 53 ரன்களை சேர்த்தால், சுனில் கவாஸ்கரின் மிகப்பெரிய சாதனை ஒன்றை முறியடிக்க முடியும்.

ஒரேயொரு டெஸ்ட் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர் 774 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்த சாதனையை 1971ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடிய போது சுனில் கவாஸ்கர் படைத்தார். இந்த சாதனையை சுப்மன் கில் முறியடித்தால், உலகமே திரும்பி பார்க்கும்.

அதேபோல் 78 ரன்களை சேர்த்தால், ஒரு டெஸ்ட் தொடரில் 800 ரன்களை விளாசிய முதல் ஆசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைக்க முடியும். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் டான் பிராட்மேன் 810 ரன்களை விளாசியதே சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை தகர்க்க சுப்மன் கில் 89 ரன்காள் சேர்க்க வேண்டும்.

இதன் மூலமாக 88 ஆண்டுகளாக நீடித்து வரும் சாதனையை முறியடிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் 5வது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் சதமடித்தால், ஒரு டெஸ்ட் தொடரில் 5 சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற முடியும். தற்போது 4 சதங்களுடன் விராட் கோலி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அதேபோல் ஓவல் மைதானத்தில் இதுவரை 9 இந்திய வீரர்கள் சதம் அடித்துள்ளனர். ஆனால் அதில் யாரும் கேப்டன்கள் இல்லை. சுப்மன் கில் சதமடித்தால், ஓவல் மைதானத்தில் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைக்க முடியும். 5 சதங்களை இந்த டெஸ்ட் தொடரில் அடிப்பதன் மூலமாக, சுப்மன் கில்லால் பிராட்மேனின் சாதனையையும் சமன் செய்ய முடியும்.

அதேபோல் 178 ரன்களை சேர்த்தால், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை விளாசிய டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் 3வது இடத்திற்கு முன்னேற முடியும். இதுவரை டான் பிராட்மேன் ஒரு டெஸ்ட் தொடரில் 974 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்து வருகிறது. இதனால் சுப்மன் கில் மிகச்சிறப்பாக விளையாட வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Story first published: Tuesday, July 29, 2025, 22:40 [IST]
Other articles published on Jul 29, 2025
English summary
IND vs ENG: Shubman Gill can break 13 Records with his bat by playing against England in the 5th Test at Oval Stadium
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+