Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில்லின் கேப்டன்சி வாழ்க்கையே முடிந்திருக்கும்.. முன்னாள் வீரர்கள் சொன்னதை பாருங்க

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ரன் குவிப்புக்கு சாதகமானது. இந்த ஆடுகளத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்தால் எந்த இலக்கை வேண்டும் என்றாலும் துரத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஸ்டோக்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன் காரணமாக முதலில் களம் இறங்கிய இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 407 ரன்களில் ஆட்டம் இழக்க, இரண்டாவதாக மீண்டும் பேட்டிங் செய்த இந்திய அணி 427 ரன்கள் குவித்தது.

Shubman gill

இதை அடுத்து இங்கிலாந்தின் வெற்றிக்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியால் 271 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த சூழலில் டாஸ் வீசப்படும் போது சுப்மன் கில்லும், முதலில் பந்து வீச தான் இருந்தோம் என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால் நல்வாய்ப்பாக டாசை அவர் இழந்ததால் இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசி நன்றாக வாங்கி கட்டிக் கொண்டது. இந்த நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, ஒருவேளை கில் டாஸ் வீசி நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம் என்று கூறியிருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கும்.

ஏனென்றால் இன்னும் முதலில் பந்து வீச தான் இருந்ததாக கில் கூறினார் ஒருவேளை இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டு அவர்கள் 600 ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் என்று ரவி சாஸ்திரி கூறினார்.

இதற்கு பதில் அளித்த இங்கிலாந்து வீரர் மார்க் புட்ச்சர் கண்டிப்பாக இங்கிலாந்து இந்த தவறை செய்தால் கூட தப்பித்து இருக்கலாம். ஆனால் கில், இந்த தவறை செய்திருந்தால் இதுதான் கேப்டனாக அவருக்கு கடைசி போட்டியாக இருந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து கில்லை பாராட்டிய அவர், விளையாட்டு உலகில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு போல் வேறு ஏதேனும் அழுத்தம் நிறைந்த பணி இருக்கிறதா என்று சொல்லுங்கள். ஏனென்றால் இந்த பொறுப்பை பலரும் உற்று நோக்கி கவனித்து வருகிறார்கள்

நம் சிறு தவறு செய்தாலும் பல விமர்சனங்களை சந்திக்க நேரிடும். அதுவும் விராட் கோலி டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் களமிறங்கிய இடத்தில் நீங்கள் விளையாடும் போது உங்கள் மீது எதிர்பார்ப்புகள் எகிறும். இந்த அழுத்தத்தை எல்லாம் பின் சிறப்பாக கையாண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று புட்சர் பாராட்டியுள்ளார்.

Story first published: Tuesday, July 8, 2025, 12:09 [IST]
Other articles published on Jul 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+