For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: உலக சாதனை.. ODI வரலாற்றிலேயே பிரம்மாண்டமான 4 ரெக்கார்டுகளை உடைத்த சுப்மன் கில்

அகமதாபாத்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், சுப்மன் கில் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ரோஹித் சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் விரைவாக ரன் சேர்த்தார். 102 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் கில். இது அவரது ஏழாவது ஒருநாள் போட்டி சதமாகவும், 13வது சர்வதேச சதமாகவும் அமைந்தது. இந்தப் போட்டியில் சுப்மன் கில் செய்த சாதனைகளை இங்கே பார்க்கலாம்.

IND vs ENG Shubman Gill complete records broken in 3rd ODI against England

ஒருநாள் போட்டிகளில் விரைவாக 2500 ரன்கள் எடுத்த வீரர்கள்

50 இன்னிங்ஸ் - சுப்மன் கில்
51 இன்னிங்ஸ் - ஹாஷிம் அம்லா
52 இன்னிங்ஸ் - இமாம்-உல் ஹக்
56 இன்னிங்ஸ் - விவியன் ரிச்சர்ட்ஸ்
56 இன்னிங்ஸ் - ஜோனாதன் ட்ராட்

ஒரே மைதானத்தில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர்கள் பட்டியல் -

ஃபாஃப் டு பிளெசிஸ் - ஜோகன்னஸ்பர்க்
டேவிட் வார்னர் - அடிலெய்டு
பாபர் அசாம் - கராச்சி
குயின்டன் டி காக் - செஞ்சுரியன்
சுப்மன் கில் - அகமதாபாத்

7 ஒருநாள் போட்டி சாதனைகளை விரைவாக எட்டிய இந்திய வீரர்கள் -

50 இன்னிங்ஸ் - சுப்மன் கில்
54 இன்னிங்ஸ் - ஷிகர் தவான்

50 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியல் -

சுப்மன் கில் - 2587 ரன்கள்
ஹாஷிம் அம்லா - 2486 ரன்கள்
இமாம்-உல்-ஹக் - 2386 ரன்கள்
ஃபகார் ஜமான் - 2262 ரன்கள்
ஷாய் ஹோப் - 2247 ரன்கள்

2022ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல் -

ஜோ ரூட் - 13 சதங்கள், 92 இன்னிங்ஸ், 3942 ரன்கள்
சுப்மன் கில் - 13 சதங்கள், 108 இன்னிங்ஸ், 4451 ரன்கள்
பாபர் அசாம் - 11 சதங்கள், 135 இன்னிங்ஸ், 5359 ரன்கள்
ட்ராவிஸ் ஹெட் - 11 சதங்கள், 107 இன்னிங்ஸ், 4464 ரன்கள்
விராட் கோலி - 11 சதங்கள், 114 இன்னிங்ஸ், 4131 ரன்கள்

இந்தப் போட்டியில் சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் 2,500 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். ஒருநாள் போட்டிகளில் விரைவாக 2,500 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். முன்னதாக, தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஹாஷிம் அம்லா 51 இன்னிங்ஸ்களில் 2,500 ஒருநாள் போட்டி ரன்களை எடுத்திருந்தார். தற்போது சுப்மன் கில் 50 இன்னிங்ஸ்களில் அந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

அதேபோல, ஒரே மைதானத்தில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் இணைந்துள்ளார். அகமதாபாத் மைதானத்தில் இதற்கு முன் டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சதம் அடித்திருந்த கில், தற்போது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்துள்ளார். இதற்கு முன் ஐபிஎல் தொடரிலும் இதே மைதானத்தில் அவர் சதம் அடித்திருந்தார். அந்த மைதானம் அவரது ராசியான மைதானமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம்.

அடுத்து, தனது 50வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையும் சுப்மன் கில் செய்துள்ளார். இதற்கு முன் எந்த இந்திய வீரரும் தனது 50வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தது இல்லை. அதேபோல, விரைவாக ஏழு ஒருநாள் போட்டி சதங்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் சுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஷிகர் தவானின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

தனது முதல் 50 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் சுப்மன் கில் செய்துள்ளார். 2,486 ரன்கள் எடுத்த நிலையில், சுப்மன் கில் 2,587 ரன்கள் குவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட்டுடன் சுப்மன் கில் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் இந்தக் காலகட்டத்தில் மட்டும் 13 சதங்களை அடித்துள்ளனர். ஜோ ரூட் 92 இன்னிங்ஸ்களில் 3,942 ரன்கள் சேர்த்து 13 சதங்களும், சுப்மன் கில் 108 இன்னிங்ஸ்களில் 4,451 ரன்களைச் சேர்த்து 13 சதங்களும் அடித்துள்ளனர்.

Story first published: Wednesday, February 12, 2025, 17:56 [IST]
Other articles published on Feb 12, 2025
English summary
IND vs ENG: Shubman Gill complete records broken in 3rd ODI against England
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+