Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிட்சில் ஸ்விங் இருந்தாலே போதும்.. கில் பேட்டில் இருந்து ரன் வராது.. சொல்லியடித்த பென் ஸ்டோக்ஸ்!

மான்செஸ்டர்: இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மீண்டும் கிரீஸில் இருந்து கொஞ்சம் ஒய்டாக வந்து வீசிய பந்தை கணிக்காமல் சுப்மன் கில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் கேஎல் ராகுல் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் முதல் செஷனில் ஒரு விக்கெட்டை கூட கொடுக்காமல் 78 ரன்களை சேர்த்தனர்.

IND vs ENG Shubman Gill Faces Criticism After Scoring Only 12 Runs Against England in the 4th Test

இதன்பின் 2வது செஷன் தொடக்கத்தில் கேஎல் ராகுல் 46 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் சாய் சுதர்சன் - சுப்மன் கில் கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சுப்மன் கில் 23 பந்துகளில் 12 ரன்களில் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் முதல்முறையாக பென் ஸ்டோக்ஸ் பந்தில் விக்கெட்டை கொடுத்துள்ளார்.

அதேபோல் ஓவர் தி விக்கெட்டில் இருந்து வீசப்பட்ட பந்துகளுக்கு சுப்மன் கில் 5வது முறையாக விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். சுப்மன் கில்லுக்கு வழக்கமாக கிரீஸில் இருந்து கொஞ்சம் ஒய்டராக வந்து வீசப்படும் பந்துகளுக்கு தடுமாற்றம் இருந்து வருகிறது. அதனை இங்கிலாந்து அணி சரியாக கணித்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியிலும் சுப்மன் கில் இப்படிதான் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் பிட்சில் கொஞ்சம் ஸ்விங் அல்லது வேகம் இருந்தாலும் சுப்மன் கில் தடுமாறுவார். முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி நல்ல ஃபிளாட் பிட்சாக இந்திய அணிக்கு கொடுத்தது. அகமதாபாத் போன்ற ஃபிளாட் பிட்ச்களில் சுப்மன் கில் விளையாடி பழகியதால், அவரை இதுபோன்ற பிட்ச்களில் சமாளிப்பது எளிதல்ல. லார்ட்ஸ் மைதானத்தில் சுப்மன் கில் 2 இன்னிங்ஸிலும் தடுமாறினார்.

இதன் காரணமாக 4வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி பிட்சில் ஸ்விங் இருப்பதை உறுதி செய்து கொடுத்துள்ளது. அதற்கேற்ப வானிலையும் டாஸும் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருப்பதால், இந்திய அணி பேட்டிங் தடுமாறி வருவதாக பார்க்கப்படுகிறது. இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தப்பட்டால் கூட, இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தும் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, July 23, 2025, 20:46 [IST]
Other articles published on Jul 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+