For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: சுப்மன் கில் சாதனை சதம்.. முதலில் இரட்டை சதம், மீண்டும் சதம்.. 148 ஆண்டுகளில் முதல் முறை

பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்திருந்த சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்து உலக சாதனை ஒன்றை படைத்திருக்கின்றார். இதன் மூலம் நான்காவது நாள் தேநீர் இடைவேளையில் போது இந்திய அணி 476 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுப்மன் கில் இரட்டை சதத்தால் 587 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 407 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி நான்காவது நாள் ஆட்டத்தில் 64 ரண்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் தொடங்கியது.

Shubman Gill

கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அரை சதம் அடித்த நிலையில் சுப்மன் கில் தொடர்ந்து ஒரு முனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் ரன்களை சேர்த்த அவர், இரண்டாவது இன்னிங்ஸிலும் 130 பந்துகளில் சதம் அடித்திருக்கின்றார்.

இதில் ஒன்பது பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் கேப்டனாக முதல் நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று சதத்தை கில் அடித்து இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை கில் படைத்திருக்கிறார்.

1971 ஆம் ஆண்டு சுனில் கவாஸ்கர் இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக படைத்த நிலையில் 54 ஆண்டுகள் கழித்து கில் இந்த சாதனையை செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் 148 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே டெஸ்டில் இரட்டை சதம் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில் படைத்திருக்கின்றார்.

இதை போன்று ஒரே தொடரில் மூன்று சதம் அடித்த கேப்டன்கள் பட்டியலில் கில்லும் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு கவாஸ்கர் நான்கு சதமும் விராட் கோலி 3 சதமும் அடித்து இருந்தனர். இதேபோன்று ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கில் படைத்திருக்கின்றார்.

இதற்கு முன்பு கவாஸ்கர் 344 ரன்கள் அடித்திருந்த நிலையில் சுப்மன் கில் 369 ரன்கள் அடித்து இருக்கின்றார். இதேபோன்று ஒரு டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை அவர் படைத்திருக்கின்றார். இதே போன்று கேப்டனாக முதல் 4 இன்னிங்சில் 524 ரன்கள் குவித்து கில் மற்றொரு உலக சாதனை படைத்துள்ளார்.

Story first published: Saturday, July 5, 2025, 20:35 [IST]
Other articles published on Jul 5, 2025
English summary
Ind vs Eng- Shubman Gill Historical Double and Hundred in a test created New record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+