Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ஒரே இன்னிங்ஸ் மூலம் கம்பீரின் ஆட்டத்தை குறைத்த கில்.. கோலி ரூட்டை எடுத்த பிரின்ஸ்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் சக்தி வாய்ந்த நபராக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருந்தார்கள். விராட் கோலி ஒரு காலத்தில் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ரன்களை சேர்த்து கொடி கட்டி பறந்தார்.

தான் சொல்வதுதான் சட்டம் என்ற வகையில் விராட் கோலி நடந்து கொண்டார். தமக்கு பயிற்சியாளர் கும்ப்ளேவை பிடிக்கவில்லை என்று கூறி அவரை மாற்றிய வல்லமை விராட் கோலிக்கு கிடைத்தது. இந்த சூழலில் விராட் கோலி ஐசிசி கோப்பையை வெல்லாத காரணத்தால் கேப்டன் பதவியை இழந்து அவருடைய பவர் குறைந்தது.

Ind vs Eng

இதனை அடுத்து ரோகித் சர்மா இந்திய கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் நபராக விளங்கினார். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டி, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போன்ற தொடர்களை வென்றது. எனினும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா கடைசியாக சொதப்பியதால் அவருடைய மவுசும் பிசிசிஐ மத்தியில் குறைந்தது.

இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என இருவருமே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இந்த சூழலில் தான் கம்பீர் பிசிசிஐயில் சக்தி மிக்க நபராக விளங்கினார். பாஜகவின் எம்பி யாக இருந்த காரணத்தால் அவருக்கு அரசியல் செல்வாக்கும் இருந்தது.

இதன் காரணமாக பிசிசிஐயில் அவருக்கு தனி மரியாதை வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்திக்கொண்டு கம்பீர் தான் சொல்வது தான் சட்டம் என்று அணியை வழி நடத்தினார். பவுலிங் பயிற்சியாளரிலிருந்து வீரர் வரை தான் சொல்பவர்கள் தான் அணியில் இருக்க வேண்டும் என்று கம்பீர் நடந்து கொண்டார்.

இந்த சூழலில் சுப்மன் கில் புதிய கேப்டன் என்பதால் கம்பீர் அவரை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டார். தாம் சொல்லும் வீரர்களை தான் பிளேயிங் லெவனில் வைக்க வேண்டும் தான் சொல்லும் படி தான் நடந்து கொள்ள வேண்டும் என கம்பீர் அறிவுறுத்தியதால், கில்லுக்கு வேறு வழியே இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் தங்களுடைய முன்னாள் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா பயன்படுத்திய அதே ரூட்டை தற்போது கில்லுக்கும் பின்பற்றி இருக்கின்றார். இந்திய கிரிக்கெட்டில் சக்தி வாய்ந்த நபராக மாற வேண்டும் என்றால் களத்தில் பல சாதனைகளை செய்ய வேண்டும்.

இந்த சூழலில் இங்கிலாந்தில் தற்போது கில் இரண்டு அரை சதம் அடித்திருக்கின்றார். அதில் ஒரு இரட்டை சதம் அடங்கும். அதுமட்டுமில்லாமல் விராட் கோலி, சச்சின், கவாஸ்கர் உள்ளிட்டவர்களின் சாதனையை தற்போது கில் முறியடித்து இருக்கின்றார். இதன் மூலம் பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியில் கில் பிரபலமடைந்து விட்டார்.

மேலும் ரசிகர்கள் மத்தியிலும் தற்போது கில்லுக்கு நல்ல பெயர் கிடைத்துவிட்டது. இதன் காரணமாக இனி கம்பீரின் ஆட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கில் தற்போது சக்தி வாய்ந்த நபராக மாறிவிட்டதால் இனி கம்பீர் தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. கில் தன்னுடைய ஆட்டத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டால், இனி அவர்தான் அடுத்த விராட் கோலி என்ற இடத்தை பெறுவார். இதன் மூலம் கில் வைத்ததுதான் சட்டம் என்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படும். இதன் காரணமாக கம்பீர் ஆட்டம் அடங்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Story first published: Friday, July 4, 2025, 14:18 [IST]
Other articles published on Jul 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+