Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: கேப்டனாக சுப்மன் கில் தொடர்ந்து 2வது சதம்.. இங்கிலாந்தில் மாஸ் காட்டும் பிரின்ஸ்

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் ஏழு சதம் அடித்திருக்கின்றார். இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது சதத்தை கில் பூர்த்தி செய்து இருக்கிறார்.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர் ராகுல் இரண்டு ரன்களிலும், கருண் நாயர் 31 ரன்களிலும் ஆட்டம் இழக்க ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 87 ரன்கள் எடுத்திருந்தார்.

Shubman gill century

ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ஆட்டம் இழக்க இந்திய அணி சரிவை நோக்கி சென்றது. எனினும் கேப்டன் கில், தன்னுடைய பொறுப்புகளை உணர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நிதானமாக விளையாடினார்.

அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து, விட வேண்டிய பந்துகளை விட்டு கேப்டன் இன்னிங்சை மீண்டும் வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கில் 199 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும். கில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 7 அரை சதம் அடித்துள்ள நிலையில், தற்போது ஏழாவது சட்டத்தை பூர்த்தி செய்து இருக்கின்றார்.

அது மட்டும் கேப்டனாக தற்போது தொடர்ந்து இரண்டு டெஸ்ட்களிலும் அவர் சதம் அடித்திருக்கிறார். இந்த தொடருக்கு முன்பு அவர் இங்கிலாந்து,தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் சதம் அடித்ததில்லை. ஆனால் கேப்டன் பொறுப்பு வந்தவுடன் கில் பட்டையை கிளப்பி இருக்கின்றார். இந்த நிலையில் SENA நாடுகளில் அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் தற்போது கில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

முதல் இடத்தில் விராட் கோலி ஏழு சதத்துடன் உள்ள நிலையில் அசாருதீன் 5 சதத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். தற்போது சச்சின், கங்குலி ஆகியோருடன் கில் இரண்டு சதங்கள் அடித்து மூன்றாவது இடத்தை பிடித்திருக்கின்றார். இதைப் போன்று பிர்மிங்காம் மைதானத்தில் நம்பர் நான்காவது வீரராக களமிறங்கி சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்று இருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும், 2018 ஆம் ஆண்டு விராட் கோலியும் இதற்கு முன்பு சதம் அடித்திருந்தனர். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் 25 வயதில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் கில் தற்போது ஏழாவது இடத்தை பிடித்திருக்கின்றார். கில் 25 வயதில் மொத்தமாக 16 சதம் அடித்திருக்கின்றார். சச்சின் டெண்டுல்கர் 25 வயதில் 40 சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 26 சதத்துடன் இரண்டாவது இடத்திலும், வில்லியம்சன் 21சதத்துடன் மூன்றாவது இடத்திலும், ஜோ ரூட் 19 சதத்துடன் நான்காம் இடத்திலும், கிறிஸ் கெயில் 18 சதத்துடன் ஐந்தாவது இடத்திலும், ஸ்மித் 17 சதத்துடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர். முதல் இன்னிங்சில் இந்திய அணி 500 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே, நமக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 2, 2025, 23:03 [IST]
Other articles published on Jul 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+