For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG: இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் சதம்.. கோலி, கவாஸ்கர் தொடர்ந்து அபாரம்..பல சாதனை படைப்பு

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக முதல் முறையாக களம் இறங்கி சதம் விளாசி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு வெளியே முதல் சதத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்திருக்கின்றார்.

கில் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதம், ஏழு அரை சதம் அடித்து இருக்கின்றார். இந்த ஐந்து சதமே ஆசிய மைதானங்களில் அடிக்கப்பட்டவை. கில் இங்கிலாந்தில் இந்தப் போட்டிக்கு முன்பு இதுவரை 6 இன்னிங்ஸில் விளையாடி மொத்தமாகவே 88 ரன்கள் தான் அடித்து இருந்தார்.

Shubman Gill hits century

இந்த சூழலில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது பலரிடம் விவாதத்தை ஏற்படுத்தியது. விராட் கோலியை போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் விளையாட மாட்டார் என்று பலரும் கூறி வந்தனர். இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய வந்த கில், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்.

ஒரு கட்டத்தில், ஒரு நாள் கிரிக்கெட் போல் பந்துகளை விரட்டினார். 56 பந்துகளில் எல்லாம் அரை சதம் அடித்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும். இந்த சூழலில் இங்கிலாந்து அணி வீரர்கள் தங்களுடைய பந்துவீச்சு திட்டத்தை மாற்றம் செய்து தற்காப்பு பில்டிங்கில் ஈடுபட்டனர். மேலும் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து தாக்குதல் நடத்தினர்.

இதில் அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்து கொடுத்த நெருக்கடியை சமாளித்தார். அது மட்டும் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்பு எல்லாம் அவர் ரன்களாக மாற்றினார். கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்து விளையாடிய கில் தன்னுடைய ஆறாவது சதத்தை 140 பந்துகளில் விளாசினார்.இதில் 14 பௌன்டரிகள் அடங்கும்.

இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய முதல் சதத்தை அடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் இன்னிங்சில் சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்று இருக்கிறார். இதற்கு முன்பு விஜய் ஹசாரே, கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்கள். மேலும் இங்கிலாந்து மண்ணில் இளம் வயதிலேயே சதம் அடித்த வெளிநாட்டு கேப்டன் என்ற பெருமையை கில் படைத்திருக்கிறார். உலக அளவில் மூன்றாவது இடத்தை இந்த பட்டியலில் பிடித்துள்ளார்

Story first published: Friday, June 20, 2025, 22:51 [IST]
Other articles published on Jun 20, 2025
English summary
Ind vs Eng- Shubman Gill hits century on his Test Captaincy Debut
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+