Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: இரட்டை சதம் அடித்தது எப்படி? ரகசியத்தை சொன்ன சுப்மன் கில்

பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் குவித்து அசத்தியிருக்கின்றார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரே அதிக ரன்கள் எடுத்த வீரர் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த இந்திய டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் படைத்திருக்கிறார்.

கில் இந்த தொடருக்கு முன்பு வரை தடுமாறி இருக்கின்றார். இந்த தொடர் முன்பு வரை கில், சேனா நாடுகளில் ஒரு சதம் கூட அடித்தது கிடையாது. இதேபோன்று இந்த தொடருக்கு முன்பு கில்லின் சராசரி 38 அளவில் இருந்தது. ஆனால் தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் அடித்துள்ளார்.

Shubman gill

அதில் ஒரு இரட்டை சதம் மற்றும் பேட்டிங் சராசரி 40 என்று அளவில் உயர்ந்திருக்கின்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீரென்று இப்படி மாறியது எப்படி என்பது குறித்து கில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் இங்கிலாந்து தொடருக்கு முன்பு ஐபிஎல் தொடர் முடிவு அடைந்தவுடன் நான் பேட்டிங்கில் சில விஷயத்தில் நான் கவனம் செலுத்தி சில மாற்றங்களை செய்தேன்.

அந்த மாற்றங்களுக்கான முடிவுகளை தான் தற்போது பார்த்து வருகின்றேன். தற்போது வரை எனக்கு அனைத்தும் சாதகமாக தான் மாறி இருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களாக நான் எந்த ஒரு கேட்ச் பயிற்சியும் எடுக்கவில்லை. ஏனென்றால் நான் தொடர்ந்து பேட்டிங் செய்து கொண்டு இருந்தேன். ஆனால் தற்போது ஸ்லீப்பில் நின்றவுடன் நான் பிடித்த கேட்ச் எனக்கு திருப்தியை அளித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பில்டிங் என்பது மிகவும் முக்கியம் என்று நாங்கள் பேசினோம். பில்டிங் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொரு வீரர்களும் அறிந்திருக்கின்றோம் என்று நாங்கள் செயல்பட்டதை போல் முதல் டெஸ்ட் போட்டியில் பாதியளவு செயல்பட்டு இருந்தால் கூட முடிவுகள் வேறு மாதிரி அமைந்திருக்கும் என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, July 3, 2025, 23:47 [IST]
Other articles published on Jul 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+