For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG:அப்படி என்ன அவசரம் சுப்மன் கில் உங்களுக்கு? தேவையில்லாமல் ரன் அவுட்..பை பை காட்டிய பேன்ஸ்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கில் 21 ரன்கள் எடுத்திருந்தபோது, தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி இருப்பது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கின்றது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

Ind vs Eng

இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. ஆனால் ஜெய்ஸ்வால் இரண்டு ரன்களிலும் ராகுல் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

38 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுக்குள் இழந்து இந்திய அணி தடுமாறிய போது களத்திற்கு வந்த சாய் சுதர்சன் மற்றும் கில் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். இந்த ஜோடி பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கில் நல்ல தொடக்கத்தை பெற்று 35 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து இருந்தார். இதில் நான்கு பவுண்டரி அடங்கும். இதில் அவர் தேவை இல்லாமல் ஒரு பந்தை அடித்து விட்டு ரன் ஓட முயற்சி செய்தார். ஆனால் அது பவுலரின் கையிலேயே சிக்கியது. இதை அடுத்து அவர் பந்தை ஸ்டெம்பை நோக்கி எரிந்து ரன் அவுட் ஆக்கினார்.

இதனால் கில், தேவையில்லாமல் 21 ரன்களில் ஆட்டம் இழந்தார். இது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது 29 ஓவர் முடிவில் இந்திய அணி 85 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டு இருக்கிறது. இதில் கில், தேவையில்லாமல் அவசரப்பட்டு பெரிய தவறு செய்து விட்டதாகவும், இது போட்டியின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, July 31, 2025, 21:02 [IST]
Other articles published on Jul 31, 2025
English summary
Ind vs Eng- Shubman Gill runout Puts India in back foot in 5th Test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+