Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: 4 சதம், 85 பவுண்டரி.. 754 ரன்கள் குவித்து சுப்மன் கில் சாதனை.. கேப்டனாக புதிய ரெக்கார்ட்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மகத்தான சாதனை ஒன்றை படைத்திருக்கின்றார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்திருக்கின்றார்.

முதல் டெஸ்டில் 147 மற்றும் 8 ரன்களும், இரண்டாவது டெஸ்டில் 269 மற்றும் 161 ரன்களும், மூன்றாவது டெஸ்டில் 16 மற்றும் 6 ரன்களும், நான்காவது டெஸ்டில் 12 மற்றும் 103 ரன்களும், ஐந்தாவது டெஸ்டில் 21 மற்றும் 11 ரன்கள் என 10 இன்னிங்ஸில் மொத்தமாக அவர் 754 ரன்கள் குவித்து இருக்கின்றார்.

Shubman Gill

இதன் மூலம் கேப்டனாக கவாஸ்கர் ஒரே தொடரில் 732 ரன்கள் அடித்த நிலையில், தற்போது சுப்மன் கில் அதனை முறியடித்து இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் பட்டியலில் கவாஸ்கர் 774 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ள நிலையில் தற்போது சுப்மன் கில் 754 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மூன்றாவது இடத்திலும் கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்து இருக்கின்றார். ஜெய்ஸ்வால் 712 ரன்கள் எடுத்து நான்காவது இடத்திலும், விராட் கோலி 692 ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள் பட்டியலில் கில் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் 810 ரன்கள் அடித்து முதல் இடத்திலும், கில் 754 ரன்கள் உடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் கிரஹம் கூச் இந்தியாவுக்கு எதிராக 752 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்திலும், கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்து நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இந்த போட்டியில் சுப்மன் கில் ஒரு சதம் அடித்திருந்தால் பிராட்மேனின் சாதனையை முறியடித்திருக்கலாம். இந்த தொடரில் நான்கு சதம் அதில் ஒரு இரட்டை சதம் ஆகும். 85 பவுண்டரி, 12 சிக்சர் அடித்திருக்கிறார். நடப்பு தொடரில் கில்லின் சராசரி 75. 40 என்ற அளவில் இருக்கின்றது.

Story first published: Saturday, August 2, 2025, 19:54 [IST]
Other articles published on Aug 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+