Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: காது கூசும் கெட்ட வார்த்தை.. இங்கிலாந்து வீரரை பார்த்து கில் என்ன சொன்னார் தெரியுமா?

லண்டன்: இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவின்போது இரு அணி வீரர்களும் மோதலில் ஈடுபட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்திருக்கின்றது. டெஸ்ட் போட்டி என்றால் ரசிகர்களுக்கு போர் அடிக்கும் எந்த ஒரு காரசாரமான விஷயமும் நடக்காது என்று இருக்கும் இமேஜை சுக்குநூறாக இந்தியா இங்கிலாந்து அணிகள் உடைத்து வருகின்றன.

பொழுதுபோக்குகள் நிறைந்த கிரிக்கெட் தொடராக தற்போது ஆண்டர்சன் டெண்டுல்கர் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 371 ரன்களை அதனை இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்திய அணி பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Ind vs Eng

இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளும் கடுமையாக மோதியது. இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுக்க, அதே ஸ்கோரை இந்திய அணியும் எடுத்து சமன் செய்தது. இதன் மூலம் இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் ஆட்டம் இருந்து கொண்டிருக்கிறது.

இந்த தருணத்தில் தான் மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவடையும் நேரத்தில் இரண்டு ஓவர்கள் வீச நேரம் இருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி வீரர்கள் வேண்டுமென்று ஆட்டத்தை தாமதப்படுத்தி வெறும் ஒரு ஒவரை மட்டும் தான் எதிர்கொண்டனர். ஒரு கட்டத்தில் பும்ரா பந்து வீசும் போது அதனை தடுத்து நிறுத்திய இங்கிலாந்து பேட்டர் சாக் கிராலி சைடு ஸ்கிரீன் அருகே பார்வையாளர் நடந்து செல்வதாகக் கூறினார்.

இந்த ஏமாற்று வேளையில் கடுப்பான இந்திய வீரர்கள் ஜாக் கிராலியை கடுமையாக திட்டினர். அப்போது இந்திய அணி கேப்டன் கில் ஒரு அநாகரிகம் அற்ற வார்த்தையை பயன்படுத்தினார். இந்திய வீரர்கள் கோபத்தில் நியாயம் இருந்தாலும், அந்த வார்த்தை கொஞ்சம் அளவு மீறி சென்றதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கில் அப்படி என்ன சொன்னார் என்று தெரியுமா? உன் ஆண்மையை வளர்த்துக் கொள் என்ற பொருள்படும் விதமாக உன் அந்தரங்க உறுப்பை வளர்த்துக் கொண்டு விளையாடு என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். இது ஸ்டெம்ப் மைக்கில் பதிவானதால் பார்வையாளர்களிடம் கிரிக்கெட் வர்ணமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாசர் உசேன் மன்னிப்பு கேட்டார். கில், அமைதியான கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் கோலியை போலவே அவரும் ஆக்ரோஷமாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 13, 2025, 16:16 [IST]
Other articles published on Jul 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+