Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் அடிச்சு சொல்றேன்.. உங்க இந்திய அணி கேப்டன் கில் தடுமாறுவார்.. காரணத்தை சொன்ன இங்கிலாந்து வீரர்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய அணிக்கு ஒரு புது அத்தியாயத்தை உருவாக்க உள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற ஜாம்பவான்கள் ஓய்வு பெற்ற நிலையில் இந்திய அணி இளம் வீரர்களைக் கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்திய அணியின் புதிய கேப்டனாக கில், தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 25 வயதான கில் திறமை வாய்ந்த வீரராக ஒரு நாள் டி20 போட்டிகளில் தனது பெயரை பெற்றிருக்கிறார். ஆசிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் அபாரமாக விளையாடி இருக்கிறார்.

Shubman Gill

எனினும் ஆசியாவுக்கு வெளியே பேட்டிங்கிற்கு நெருக்கடி உள்ள ஆடுகளங்களில் தடுமாறி இருக்கிறார். இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் ஆசியாவுக்கு வெளியே விளையாடியதில் மொத்தமாகவே 559 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி வெறும் 25 ஆகும். ஆசியாவுக்கு வெளியே வெளிநாட்டு மண்ணில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் கில் விளையாடி மொத்தமாகவே 88 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 14 ஆகும். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் இங்கிலாந்து வீரர் நிக் நைட், கில்லின் பேட்டிங்கில் மிகப்பெரிய ஒரு குறை தென்படுவதாக கூறியுள்ளார்.

இந்த குறையை வைத்து அவரால் இங்கிலாந்தில் ரன் சேர்ப்பது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்தேன். அப்போது கில்லிடம், சில சிக்கல்கள் இருப்பதை நான் உணர்ந்தேன். உங்களுக்கு பேட்டிங்கில் தன்னம்பிக்கை இழந்து காணப்படும்போது ரன்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் தீவிரமாக முயல்வீர்கள்.

அப்போது பேட்டிங் செய்யும்போது உங்களுடைய முன் கால் உங்களை அறியாமல் பெருமளவு முன்னோக்கி நகரும். இதன் மூலம் காலுக்கு வரும் பந்தை அடித்து ஆடுவார்கள். கடந்த சில காலமாக கில் இடம் இந்த பேட்டிங் குறை தெரிகிறது. இதன் மூலம் கில்லுக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் போது அவர் காலை முன்னோக்கிக் கொண்டு அதிகமாக விளையாடுவதன் மூலம் LBW ஆகலாம்.

இந்தக் குறை நம்மிடம் இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொண்டிருப்பார் என நம்புகிறேன். இதேபோன்று இந்திய அணியில் இருக்கும் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவருக்குமே ஆப் சைடுக்கு வெளியே செல்லும் பந்தை எதிர்கொள்வதில் கடும் சவால்கள் இருக்கும் என்று அவர் கூறினார். நிக் நைட் இங்கிலாந்து அணிக்காக 17 டெஸ்ட் மற்றும் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Take a Poll
Story first published: Wednesday, June 18, 2025, 10:48 [IST]
Other articles published on Jun 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+