Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாரி ப்ரூக் கேட்சை பிடித்த சிராஜ்.. அடுத்து பவுண்டரி லைனில் நடந்த சம்பவம்.. குதூகலமான இங்கிலாந்து!

லண்டன்: பிரசித் கிருஷ்ணா பவுலிங் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் கொடுத்த கேட்சை பிடித்த சிராஜ், கொஞ்சம் கூட கவனமில்லாமல் பவுண்டரி லைனில் கால் வைத்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஹாரி ப்ரூக் அதிரடியாக விளையாடி ரன்களை விளாசி அரைசதம் கடந்ததோடு, இந்திய அணியையும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 374 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பின் போப் - டக்கெட் கூட்டணி 2வது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

Siraj takes the catch for Harry Brook

இதில் டக்கெட் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில், பிரசித் கிருஷ்ணா பவுலிங்கில் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார்/ இதன்பின் போப் 27 ரன்கள் எடுத்து சிராஜ் பந்தில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 106 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ஹாரி ப்ரூக் - ஜோ ரூட் கூட்டணி இணைந்தது. ஜோ ரூட் நிதானமாக விளையாட, ஹாரி ப்ரூக் அதிரடியாக ஆடினார்.

இதனால் பவுன்சர் திட்டத்துடன் பிரசித் கிருஷ்ணா பவுலிங் செய்ய தொடங்கினார். அதற்கேற்ப லெக் சைடில் முகமது சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரையும் நிறுத்தி கூடுதல் வேகத்துடன் பவுன்சரை வீசினார். அதனை ஹாரி ப்ரூக் அட்டாக் செய்ய அது நேராக முகமது சிராஜ் கைகளில் சென்று விழுந்தது. ஆனால் கேட்ச் பிடித்த கையோடு கால்களை பின் நகர்த்த, சிராஜ் பவுண்டரி எல்லையை மிதித்தார்.

இதனால் அது சிக்ஸ் என்று அறிவிக்கப்பட்டது. சிராஜ் நிச்சயம் கேட்சை பிடிப்பார் என்று நம்பி பிரசித் கிருஷ்ணா கொண்டாட, பின்னர் தலையில் கை வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஹாரி ப்ரூக் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினார். இதன் மூலமாக 39 பந்துகளிலேயே ஹாரி ப்ரூக் அரைசதத்தை எட்டினார்.

அதேபோல் இங்கிலாந்து அணியும் 200 ரன்களை கடந்து சென்றது. இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கைகள் ஓங்கி இருக்கின்றன. இந்த பார்ட்னர்ஷிப்பை பிரித்தால் மட்டுமே இந்திய அணியால் ஆட்டத்திற்குள் கம்பேக் கொடுக்க முடியும். இதனால் ரசிகர்களிடையே ஒரு விக்கெட்டை இந்திய அணி பவுலர்கள் வீழ்த்த வேண்டிய என்று வேண்டி வருகின்றனர்.

Story first published: Sunday, August 3, 2025, 19:05 [IST]
Other articles published on Aug 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+