Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: ஷார்ட் பால் விளையாட தெரியலனா, போய் டென்னிஸ், கோல்ஃப் விளையாடுங்க.. கவாஸ்கர் காட்டம்

மும்பை: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்து தற்போது போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் ஏற்பட்டிருக்கிறது. எனினும் காயத்தையும் மீறி பண்ட் பேட்டிங் செய்ய வந்தார்.

வீரர்கள் காயமடைந்தால் ரன்கள் ஓடுவதற்கு என ஒரு வீரர் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த முறையை icc அதிரடியாக நீக்கியது. ஆனால் பந்து தலையில் பட்டு வீரர்களுக்கு ஏதேனும் மயக்கம் வந்தால் உடனடியாக அவர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாம்.

Sunil Gavaskar

அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டு விளையாடலாம் என்ற விதி இருக்கின்றது. தற்போது இதற்கு தான் கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஷார்ட் பால் விளையாட தெரியாத கையாலாதத்தனத்திற்கு மாற்று வீரர்களை கொண்டு வரும் ஐசிசி, காயம் அடைந்த வீரர்களுக்கு ஏன் மாற்று வீரர்களை கொண்டு வரக்கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "உங்களுடைய கையாளாத தனத்திற்கு மாற்று வீரர்களை அனுமதிக்க முடிவு எடுத்து இருக்கின்றீர்கள். ஆனால் முதலில் உங்களால் ஷார்ட் பாலை சரியாக விளையாட முடியவில்லை என்றால் நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட் பக்கமே வரக்கூடாது. அதற்கு பதில் டென்னிஸ் அல்லது கோல்ப் சென்ற விளையாடுங்கள்."

"ஒரு பந்தை விளையாடத் தெரியாத ஒரு வீரருக்கு நீங்கள் மாற்றுவீரரை வழங்குகிறீர்கள். ஆனால் தற்போது பண்டிற்கு, உண்மையிலேயே காலில் அடிபட்டு அவர் விளையாட முடியாத நிலையில் இருக்கின்றார். ஆனால் இவருக்கு ஒரு மாற்று வீரர் சேர்க்க முடியாது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக ஒரு ஆலோசனை குழுவை உருவாக்குங்கள். அதில் மருத்துவ நிபுணர்களை சேர்த்து மாற்று வீரர்களை சேர்க்கலாமா வேண்டாமா என்பது குறித்து யோசிங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கு முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாஹனும் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதில்,"கால்பந்து வீரர் ஒருவர் காலை உடைத்துக் கொண்டால் மாற்று வீரருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அப்போது கிரிக்கெட்டில் மட்டும் ஏன் அனுமதி வழங்கப்படவில்லை. பண்ட்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. அவர் இனி விளையாட முடியாத நிலை இருக்கும்போது, அவருக்கு பதில் மாற்றுவீரரை சேர்க்க வேண்டும். அதுதான் சரியான விஷயம்" என்று மைக்கேல் வாஹன் தெரிவித்து இருக்கிறார்.

Story first published: Friday, July 25, 2025, 17:04 [IST]
Other articles published on Jul 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+