Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ENG: லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்குள் கவாஸ்கரை அனுமதிக்காத பாதுகாவலர்.. என்ன நடந்தது?

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் தன்னுடைய 76 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு காலத்தில் அதிக ரன்கள், அதிக சதம், முதல் முறையாக பத்தாயிரம் ரன்களை தொட்ட வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை கவாஸ்கர் படைத்திருந்தார்.

தற்போது கவாஸ்கர் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த சூழலில் கவாஸ்கரின் பிறந்தநாள் விழா ஒன்று மும்பையில் நடைபெற்றது. இதில் கவாஸ்கர் உடன் விளையாடிய பல முன்னாள் வீரர்கள் பங்கேற்றார்கள்.

Sunil Gavaskar

அப்போது யஜுர் விந்தர சிங் என்ற முன்னாள் வீரர் கவாஸ்கருக்கு நடந்த ஒரு அவமானத்தை குறித்து பேசி இருக்கின்றார். 1979 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோத இருந்தது. அப்போதே கவாஸ்கர் உலக கிரிக்கெட்டில் ஒரு முன்னணி வீரராக இருந்தார். அப்போது தன்னுடைய நண்பர்களுக்கு போட்டியை பார்ப்பதற்கான பாஸ் வழங்க கவாஸ்கர் மைதானத்தை விட்டு வெளியே வந்தார்.

அப்போது அவர் வெறும் காலணி மட்டும்தான் அணிந்திருந்தார். மீண்டும் மைதானத்திற்குள் நுழையும்போது அங்கிருந்து பாதுகாவலர் கவாஸ்கரை உள்ளே விட அனுமதி மறுத்துவிட்டார். அப்போது அங்கிருந்த பலரும் இவர்தான் நட்சத்திர வீரர் கவாஸ்கர் உள்ளே விடுங்கள் என்று கூறிய பிறகும் உரிய பாஸ் இல்லாமல் நான் யாரையும் விட மாட்டேன் என்று அந்த பாதுகாவலர் கூறினார்.

வெளியே நின்று கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்த பல ரசிகர்களும் கவாஸ்கரை சுற்றி க்கொண்டு ஆட்டோகிராப் வாங்கினார்கள். அந்த பாதுகாவலருக்கு கவாஸ்கர் யார் என்று கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால் வேண்டுமென்றே அவர் உள்ளே விட மறுத்துவிட்டார்.

இதனை அடுத்து நாங்கள் அணியின் மேலாளரை வரவைத்து பாதுகாவலருடன் பேச சொன்னோம். அதன் பின் அணி மேலாளர் கவாஸ்கரின் பாசை எடுத்து வந்த பிறகு தான் அவர் உள்ளே வர அனுமதிக்கப்பட்டார் என்று யஜுவேந்தர் சிங் கூறினார். இதேபோன்று லார்ட்ஸ் மைதானத்தில் கவாஸ்கர் பில்டிங் செய்து கொண்டிருந்தபோது ஒரு கேவலமான மாஸ்கை அணிந்திருந்தார்.

அப்போது இதனை தடுத்த நடுவர் நீங்கள் அணிந்திருக்கும் மாஸ்க்கால் கவன சிதறல் ஏற்படும் அதை நீக்குங்கள் என்று நடுவர் கூறினார். அதற்கு கவாஸ்கர் பேட்ஸ்மேனின் பணி பாலை பார்ப்பது மட்டும்தான். நான் பின்னால்தான் நிற்கின்றேன். நான் ஏன் மாஸ்கை நீக்க வேண்டும் என்று கவாஸ்கர் கூறியதை அடுத்து உடனே அந்த நடுவர் நீங்கள் அணிந்திருக்கும் மாஸ்க் என்னுடைய கவனத்தை சிதற வைக்கிறது. அதை எடுங்கள் என்று கூறினேன் என்றார். இதைக் கேட்டதும் மைதானத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர் என்பதையும் யஜுர்வேந்தரசிங் கூறியுள்ளார்.

Story first published: Thursday, July 10, 2025, 14:55 [IST]
Other articles published on Jul 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+